fbpx

சென்னையில் எங்கெல்லாம் STRONG ROOM அமைக்கப்பட்டுள்ளது…! இந்த பக்கம் யாரும் போயிடாதீங்க..! முழு விவரம்…

சென்னையில் மூன்று இடங்களில் STRONG ROOM அமைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தலின் நேற்றைய தினம் 21 மாநிலங்கள் உட்பட 102 தொகுதிகளுக்கு நடந்து முடிந்தது. இதில் தமிழத்தில் உள்ள 39 மாவட்டங்களுக்கும் ஒரே கட்டமாக நேற்றைய தினம் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடியும் நேரத்தில், வரிசையில் காத்திருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால், சில வாக்குச்சாவடிகளில் இரவு 7.30 மணி வரை வாக்குப்பதிவு நீடித்தது.

வாக்குப்பதிவு முடிந்ததும், முகவர்கள் முன்னிலையில், பதிவான வாக்குகள், பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டு, அதன்பின், மின்னணு இயந்திரத்திற்கு சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்தந்த தொகுதியில் பதிவான வாக்குகள் அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக STRONG ROOM-ல் துப்பாக்கி இந்திய காவலர்களின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு துணை ராணுவம், உள்ளூர் போலீஸார், ஆயுதப் படையினர் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் எங்கெல்லாம் வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம். அதன்படி சென்னையை பொறுத்தவரை தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை என மூன்று நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. தென் சென்னைக்கு உட்பட்ட வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் அனைத்துமே அண்ணா பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அதே போல் மத்திய சென்னைக்கு உட்பட்ட வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் அனைத்துமே லயோலா கல்லூரியில் பாதுக்காப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் வட சென்னைக்கு உட்பட்ட வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் அனைத்துமே ராணிமேரி கல்லூரியில் பாதுக்காப்பாக வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இந்த மூன்று இடங்களில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் பலத்த பாதுகாப்பு மத்தியில் STRONG ROOM-ல் வைக்கப்படுவதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்த பிறகு சரியாக 11 மணியளவில் தேர்தல் நடத்தும் அலுவலர், மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி பார்வையிட்ட பிறகு சீல் வைக்கும் பனி நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

Kathir

Next Post

குழப்பம், குளறுபடி..!! தமிழ்நாட்டில் மறுவாக்குப்பதிவு..? வெளியான ஷாக்கிங் தகவல்..!!

Sat Apr 20 , 2024
18-வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நேற்று முதல் கட்டமாக நடைபெற்றது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. 6 மணிக்கு முன்பாக வரிசையில் காத்திருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் தரப்பட்டு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு சதவீதம் மிகப்பெரிய முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. […]

You May Like