fbpx

புற்றுநோயுடன் போராட்டம்..!! பழம்பெரும் நடிகர் ஜூனியர் மெஹமூத் காலமானார்..!! திரையுலகினர் இரங்கல்..!!

புற்றுநோயுடன் போராடி வந்த பழம்பெரும் நடிகர் ஜூனியர் மெஹமூத் (வயது 67) நேற்றிரவு மும்பையில் காலமானார். அவருக்கு வயது 67.

இவர் பழம்பெரும் இந்தி காமெடி நடிகர் மெஹமூத் அலியின் மகன். இவரின் இயற்பெயர் நயீம் சயீத். சினிமா ரசிகர்கள் இவரை ‘ஜூனியர் மெஹமூத்’ அழைப்பர். இவர், கடந்த 1967ஆம் ஆண்டு வெளியான ‘நவுனிகல்’ என்ற இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதுவரை 265 திரைப்படங்களில் நடித்துள்ள இவர், 6 மராத்தி மொழி திரைப்படங்களை தயாரித்து இயக்கியும் உள்ளார்.

கட்டி படாங், மேரா நாம் ஜோக்கர், பரவரிஷ், தோ ஆவூர் தோ பாஞ்ச் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ள இவர் இந்தி, மராத்தி, பஞ்சாபி உட்பட 7 மொழிகளில் நடித்து பிரபலமடைந்தார். இவர், கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வந்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இவர் புற்றுநோயின் 4ஆம் நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக அவருக்கு மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Chella

Next Post

தனது ஒரு மாத சம்பளத்தை புயல் நிவாரண நிதிக்கு வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

Fri Dec 8 , 2023
சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத இடைவிடாமல் பெய்த கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. உயிரிழப்பும் நிகழ்ந்துள்ளது. மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஒரு மாத […]

You May Like