fbpx

காதலனுடன் சேர்ந்து எலி மருந்து சாப்பிட்ட மாணவி..! தஞ்சையில் நடந்த சம்பவம்..!

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. பிளஸ்-2 படிப்பை முடித்துவிட்டு நீட் தேர்வுக்காக பயிற்சி எடுத்து வந்தார். கடந்த 25ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள் மாணவியை பல்வேறு இடங்களில் தேடினர். அவர் எங்கும் காணப்படவில்லை. இதுகுறித்து மாணவியின் தந்தை சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வந்தனர். மர்மமான மாணவியும், அதே ஊரை சேர்ந்த 22 வயது வாலிபரும் காதலித்து வருகின்றனர். இந்த காதலுக்கு இருவரது பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 25ம் தேதி திருச்சி சென்று அங்கு திருமணம் செய்து கொண்டனர். வீட்டிற்கு சென்றால் பெற்றோர் பிரிந்து விடுவார்கள் என்பதால் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் வந்து எலி மருந்து சாப்பிட்டு விட்டு இரவு தங்கினர். நேற்று காலை இருவரும் பெற்றோரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, தற்கொலைக்கு எலி மருந்து சாப்பிட்டதாக தெரிவித்து விட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தஞ்சாவூர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிளஸ்-2 மாணவி காதலனுடன் சேர்ந்து எலி மருந்தை சாப்பிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rupa

Next Post

’கூடா நட்பு கேடு விளைவிக்கும்’..!! லொள்ளு சபா ஆண்டனியின் பரிதாப நிலை..!! சந்தானம் சொல்லியும் கேட்கல..!!

Thu Apr 4 , 2024
லொள்ளு சபா சேஷு சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. நடிகர் சந்தானம் உள்ளிட்ட லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்த பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். சமீபத்தில் லொள்ளு சபா நடிகர்களை அழைத்து 20-வது வருட கொண்டாட்டம் ஒன்று நடைபெற்றது. அதில், ஒரு சிலர் மட்டும் கலந்துக் கொள்ளவில்லை. அவர்கள் இப்போ என்ன செய்யுறாங்க என தேடி அலைந்த நிலையில், லொள்ளு […]

You May Like