fbpx

ஒரே சமயத்தில் 70 சத்து மாத்திரைகளை சாப்பிட்டதால் மாணவி உயிரிழந்த விவகாரம்..!! பாய்ந்தது நடவடிக்கை..!!

ஊட்டி அருகே சத்து மாத்திரை சாப்பிட்ட குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் சுகாதார அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சமீபகாலமாக இந்தியா முழுவதும் H2N3 வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலை தடுக்க கடந்த வாரம் ஐசிஎம்ஆர் அறிவிப்பு வெளியிட்டது. அதனடிப்படையில் 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் தொடங்கி சென்னையில் 200 வார்டுகளில் 200 சிறப்பு காய்ச்சல் முகாம்களும் தமிழகம் முழுவதும் 800 இடங்களிலும் முகாம்கள் நடக்கின்றன. காய்ச்சல் பாதித்தவர்களுக்கு 11,333 மருத்துவ கட்டமைப்புகளில் ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை தேவையான மருந்துகள் கையிருப்பு வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் கடைபிடித்த விதிமுறைகளை போல இப்போதும் முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்” என்றார்.

இதனைத் தொடர்ந்து ஊட்டி அருகே சத்து மாத்திரை சாப்பிட்ட குழந்தை பாதித்ததாக வந்த தகவலுக்கு பதிலளித்த அமைச்சர், “வியாழக்கிழமைக்கு பதிலாக வெள்ளிக்கிழமை சத்து மாத்திரை தந்துள்ளார்கள். அதிலும், அங்கிருந்த ஆசிரியர்கள் மொத்தமாக மாத்திரைகளை வழங்கியுள்ளனர். உயிரிழந்த குழந்தை 70 மாத்திரைகள் சாப்பிட்டிருக்கிறார். இது தொடர்பாக சுகாதாரத்துறை அலுவலர்கள் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என்றார்.

Chella

Next Post

பரபரப்பு: பேருந்து மேல் ரயில் மோதியது! 7 பேர் பலி, 84 பேர் படுகாயம்! தீவிர விசாரணை!

Fri Mar 10 , 2023
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் நடைபெற்ற பயங்கரமான சாலை விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நைஜீரிய நாட்டின் லாகோஸ் நகரில் தான் இந்த பயங்கரமான விபத்து நடந்திருக்கிறது. இந்த பயங்கர விபத்தில் பயணிகள் ரயில் ஒன்று பேருந்துடன் மோதியிருக்கிறது. இந்த விபத்தில் பேருந்து பயங்கரமாக சேதம் அடைந்துள்ளது. இதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். 80க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நைஜீரிய நாட்டின் லாகோஸ் நகரில் […]

You May Like