சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காதலன் கண்முன்னே காதலி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் காதலன் கண் முன்னே காதலிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவரும், மாணவியும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த நிலையில், அங்கு அடையாளம் தெரியாத இருவர் வந்து மாணவனை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர், மாணவனை அடித்து துரத்திவிட்டு, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த மாணவன் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இந்த புகாரையடுத்து, கோட்டூர்புரம் உதவி ஆணையர் பாரதிராஜன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டின் நம்பர் 1 யுனிவர்சிட்டியிலேயே இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Read More : TCS நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!!