fbpx

நீட் தேர்வு எழுதிய மாணவி, தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை..!!

நீட் தேர்வு எழுதிய மாணவி, தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கொளுத்தினிப்பட்டியை சேர்ந்தவர்கள் சேகர்-லட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு மகளான பிரீத்தி, பிளஸ்-2 முடித்த நிலையில், கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்தார். இதனால், இந்த ஆண்டு நீட் தேர்வுக்காக வேங்காம்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தார். கடந்த மாதம் நடந்த நீட் தேர்வையும் பிரீத்தி எழுதினார். இதற்கிடையே, கடந்த ஆண்டைபோலவே இந்தாண்டும் நீட் தேர்வில் தோல்வி அடைந்து விடுவேனோ என அடிக்கடி வீட்டில் சொல்லிக் கொண்டு புலம்பி வந்துள்ளதாக தெரிகிறது.

நீட் தேர்வு எழுதிய மாணவி, தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை..!!

இந்நிலையில், நேற்றிரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரீத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பிரீத்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வு எழுதிய மாணவி, தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

’மின்சார சட்டத்திருத்த மசோதாவால் இலவச மின்சாரத்திற்கு பாதிப்பில்லை’..! - மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்

Fri Aug 12 , 2022
”மின்சார சட்டத்திருத்தம் எந்தவித இலவச மின்சாரத்தையும் நிறுத்துங்கள் என்று சொல்லவில்லை” என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், “தேசியக்கொடியை அனைத்து வீடுகளிலும் ஏற்ற வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாரத தேசத்திற்காக பாடுபட்ட முன்னோர்கள் பற்றியும், தியாகிகள் பற்றியும்இளைஞர்கள் அறிய தேசியக்கொடி ஏற்ற வேண்டும். தேசியக்கொடியின் மகிமையும், பெருமையும் கொடி காத்த குமரனுக்கே, இறக்கும் தருவாயில் கூட தேசிய […]
’ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஒழிக்க முடியாது’..!! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பரபரப்பு பேட்டி..!!

You May Like