fbpx

லிவிங் டூ கெதரால் விடுதியிலேயே குழந்தை பெற்றெடுத்த மாணவி..!! தருமபுரியில் அதிர்ச்சி சம்பவம்..!!

தருமபுரி மாவட்டத்தில் ஆதி திராவிடர் விடுதியில் மாணவி ஒருவர் பெண் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒட்டப்பட்டியில் உள்ள ஆதிதிராவிடர் விடுதியில் தங்கி, அரசு கல்லூரிக்கு தினந்தோறும் சென்று படித்து வந்த மாணவி ஒருவர், விடுதியில் தங்கியிருந்த போது பிப்ரவரி 13ஆம் தேதி அதிகாலையில் கடும் வயிற்று வலியால் துடித்துள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு வந்த விடுதி காப்பாளர், கல்லூரி மாணவி பிரசவ வலியால் துடிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சற்று நேரத்தில், கல்லூரி மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது.

உடனடியாக விடுதி காப்பாளர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்த விசாரணையில், மனோஜ் என்ற 21 வயது இளைஞருடன் மாணவி லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்தது தெரியவந்தது. அதன் பின்னர், விடுதி நிர்வாகத்தினர், மாணவிக்கு குழந்தை பிறந்தது குறித்தும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருப்பது குறித்தும் ஓசூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இளைஞர் மனோஜூக்கும், மாணவியின் குடும்பத்தினருக்கும் போலீசார் மூலம் தகவல் தெரிவித்தனர்.

இரு தரப்பினரும் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்த நிலையில், இதுவரை இது குறித்து எந்தவொரு புகாரும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
மாணவி ஆதிதிராவிடர் விடுதியில் சேரும் போதே 2 மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும், இது குறித்து மாணவியிடம் விடுதி நிர்வாகத்தினர் கேட்டபோது, தன்னுடைய உடல்வாகு இயல்பிலேயே இப்படித்தான் எனக் கூறி மாணவி, கர்ப்பமானதை மூடி மறைத்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் தற்போது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

வந்தாச்சு ஜிபிஎஸ்… இனி காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை… மத்திய அரசின் சூப்பரான திட்டம்.!

Thu Feb 15 , 2024
இந்தியாவில் நெடுஞ்சாலை போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக நான்கு வழி சாலைகள் அமைக்கப்பட்டது. மேலும் தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்பிற்காக டோல்கேட் அமைக்கப்பட்டு ஃபாஸ்டாக் முறையில் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெங்களூர் மற்றும் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஃபாஸ் டாக்கிற்கு பதிலாக சேட்டிலைட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டணம் வசூல் செய்யும் முறை சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்படுவதை தொடர்ந்து நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் டோல்கேட்கள் படிப்படியாக அகற்றப்படும் […]

You May Like