அரிக்காவின் மேரிலாந்தைச் சேர்ந்த மாணவர்கள், தனது பள்ளியை ரூ.34 லட்சத்திற்கு விற்பனை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜில்லோ என்ற ரியல் எஸ்டேட் இணையதளத்தில் விளம்பரம் கொடுத்து பள்ளியை விற்கும் முயற்சியில் மாணவர்கள் இறங்கியுள்ளனர். அடுத்த சில நேரங்களிலேயே அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக தொடங்கியது. ஜில்லோ என்ற ரியல் எஸ்டேட் இணையதளத்தில், மேரிலாந்தில் உள்ள மீட் என்ற உயர்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவர்கள், தங்கள் பள்ளி புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு “நல்லது, ஆனால் பாதி வேலை செய்யும் சிறை” என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளனர்.
மேலும், அந்த விளம்பரத்தில் பள்ளியில் உள்ள 15 குளியலறைகளில் வடிகால் பிரச்சனை இருப்பதாகவும். அதில் ஒரு நல்ல சமையலறை மற்றும் ஒரு சாப்பாட்டு அறை உள்ளது. தனியார் கூடைப்பந்து மைதானத்தில், ” எலிகள், அணிகள் மற்றும் பூச்சிகள், அவை உங்களை சத்தமிட வைக்கும்” என்று அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த குழந்தைகள் பள்ளியின் விலை 42,069 டாலர் (34 லட்சம்) என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவு வைரலானதை தொடர்ந்து சமூக ஊடக பயனர்கள் இதைப் பற்றி கருத்து தெரிவித்து வருகின்றனர்.