மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான CUET(க்யூட்) தேர்வுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கு, பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு (CUET) தேர்ச்சி அவசியம். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (NTA) ஆண்டுதோறும் நடத்துகிறது.
அதன்படி, 2025-26 கல்வியாண்டிற்கான முதுநிலை படிப்புகளுக்கான CUET தேர்வு கணினி முறையில் மார்ச் 13 முதல் ஏப்ரல் 1 வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஜனவரி 2 அன்று தொடங்கி பிப்ரவரி 8 அன்று நிறைவடைந்தது. இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் 4,12,024 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், பாட வாரியாக விரிவான தேர்வு அட்டவணையை NTA தற்போது வெளியிட்டுள்ளது. பட்டதாரிகள் https://exams.nta.ac.in/CUET-PG/ இணையதளத்தில் சென்று இதனை அறிந்து கொள்ளலாம். மேலும், தேர்வுக்கான ஹால்டிக்கெட் மற்றும் கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற வலைத்தளத்தில் பெறலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், 011-40759000 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது helpdesk-cuetpg@nta.ac.in மின்னஞ்சல் மூலமோ தொடர்புகொண்டு விளக்கம் பெறலாம் என NTA தெரிவித்துள்ளது.
Read More: நாளை முதல் UPI புதிய விதிகள் அமல்!. 14 நாட்கள் வரை தான் டைம்!. அதுக்குள்ள எல்லாம் முடிச்சுடுங்க!.