fbpx

#Loan: மாணவர்களே உயர்‌ கல்வி படிக்க கல்விக்கடன்‌…! விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க…!

சேலம்‌ மாவட்டத்தில்‌ உயர்‌ கல்வி பயில கல்விக்கடன்‌ பெறுவதற்கு மாணாக்கர்கள்‌ எவ்வித தயக்கமும்‌ இன்றி தங்களது வங்கி மேலாளரை அணுகி பயன்‌ பெறலாம்‌.

இதுகுறித்துமாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம் தனது செய்தி குறிப்பில் மாணவ, மாணவிகள்‌ படிப்பதற்கு கல்விக்‌ கட்டணம்‌ ஒரு தடையாக இருக்கக்‌ கூடாது என்ற நோக்கில்‌ உயர்‌ கல்வியைத்‌ தொடர, கல்விக்‌ கடன்‌ முனைப்புத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ வங்கிகள்‌ மூலமாக கல்விக்‌ கடனுக்கு ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில்‌ சேலம்‌ மாவட்டத்தில்‌ 2021-2022-ம்‌ கல்வியாண்டில்‌ 12-ம்‌வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள்‌ உயர்‌ கல்வி பயில வங்கிகளில்‌ கல்விக்‌ கடன்‌ வழங்குதல்‌ குறித்து வங்கியாளர்கள்‌ மற்றும்‌ பள்ளிக்‌ கல்வித்துறை அலுவலர்களுடன்‌ ஆய்வுக்கூட்டம்‌ நடத்தப்பட்டு, தேவையான நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வங்கியாளர்கள்‌ தகுதியுள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும்‌ உயர்கல்வி பயிலவங்கிகளில்‌ கல்விக்‌ கடன்‌ உதவி வழங்கிட வேண்டுமெனவும்‌, சலம்‌ மாவட்டத்தில்‌ உள்ளஅனைத்து ஒன்றியங்களிலும்‌ பள்ளி மாணவர்கள்‌ மற்றும்‌ தலைமை ஆசிரியர்களுடன்‌ கலந்துரையாடி வங்கி கடன்‌ குறித்த விழிப்புணர்வினை வங்கி அலுவலர்கள்‌ ஏற்படுத்திட வேண்டும் எனவும்‌ அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், உயர்கல்வி பயில கல்விக்‌ கடன்‌ பெறுவதற்கு மாணவ, மாணவிகள்‌ எவ்வித தயக்கமும்‌ இன்றி வங்கி மேலாளரை அணுகி, உயர்கல்வி கடனுதவி பெற https://www.vidyalakshmi.co.in/Students/ என்ற இணையதளத்தில்‌ விண்ணப்பிக்கலாம்‌.

விண்ணப்பிக்கும்போது மாணவர்‌ மற்றும்‌ பெற்றோரின்‌ வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம்‌,பாஸ்போர்ட்‌ அளவு புகைப்படம்‌, வருமான வரித்துறையால்‌ வழங்கப்படும்‌ பான்‌ கார்டு,மாணவரின்‌ ஆதார்‌ அட்டை, வருமான சான்று, மதிப்பெண்‌ சான்று, கல்விக்‌ கட்டண விபரம்‌,விண்ணப்பக்‌ கடிதம்‌, கல்லூரியில்‌ சேர்க்கைகான ஒதுக்கீட்டுக்‌ கடிதம்‌ ஆகிய ஆவணங்களுடன்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌. மருத்துவம்‌ மற்றும்‌ பொறியியல்‌ படிக்கவிரும்பும்‌ மாணவர்கள்‌ கட்டாயம்‌ கலந்தாய்வு மூலம்‌ கல்லூரியை தேர்வு செய்திருத்தல்‌ வேண்டும்‌. உயர்கல்வி பயில கல்விக்‌ கடன்‌ பெறுவதற்கு இந்தியன்‌ வங்கியினை 94427 00096 என்ற எண்ணிலும்‌, கனரா வங்கியினை 97901 81038 என்ற எண்ணிலும்‌, பாரத ஸ்டேட்‌ வங்கியினை 90808 89398 என்ற எண்ணிலும்‌, யூனியன்‌ வங்கியினை 81068 35750 என்ற எண்ணிலும்‌ இந்தியன்‌ ஓவர்சீஸ்‌ வங்கியினை 98654 76754 என்ற எண்ணிலும்‌ ஐசிஐசிஐ வங்கியினை 98408 47773 என்ற எண்ணிலும்‌ தொடர்பு கொண்டு பயன்‌ பெறலாம்‌.மேலும்‌, இக்கல்விக்‌ கடன்‌ பெறுவதற்கு உதவிடும்‌ வகையில்‌ பள்ளிகல்வித்துறையின்‌ சேலம்‌ மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலரை 93857 45857 என்ற அலைபேசி எண்ணில்‌ தொடர்புக்கொண்டு பயன்பெறலாம்‌.

Vignesh

Next Post

இவர்கள் எல்லாம் தவறுதலாக கூட பாசி பருப்பை சாப்பிடக் கூடாது.. பல சிக்கல்கள் ஏற்படலாம்..

Fri Sep 23 , 2022
பருப்பு சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. ஏனென்றால், உடலுக்கு நன்மை பயக்கும் பல வகையான சத்துக்கள் நிலவேம்புக் கறியில் காணப்படுகின்றன. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாமிரம் போன்ற பல சத்துக்கள் பருப்பில் உள்ளன… ஆனால் பருப்பை உட்கொள்வது சிலருக்கு ஆபத்தானது என்பது உங்களுக்குத் தெரியுமா? அத்தகைய சூழ்நிலையில், எந்தெந்த நபர்கள் பச்சை பயிறு அல்லது பாசி பருப்பை உட்கொள்ளக்கூடாது? […]

You May Like