fbpx

மாணவர்களே..!! பொதுத்தேர்வு தேதியில் மாற்றமா..? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்..!!

நாடாளுமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலால் பொதுத்தேர்வு பாதிக்கப்படுமா என்ற சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “பொதுவாகவே தேர்தல் தேதி அறிவிக்கும்போது ஒரு மாநிலத்தின் தேர்வு தேதிகளுக்கு தகுந்தாற்போல் அறிவிக்கப்படும். இது வழக்கமான ஒன்று. ஏனென்றால், இது மாணவர்களின் நலன் சார்ந்த விஷயம். மார்ச் மாதம் ஆரம்பிக்கும் தேர்வுகளுக்கு மாணவர்கள் ஒரு வருடமாக தயாராவார்கள் என்பதால், தேர்வு தேதிக்கு தகுந்தாற்போலவே தேர்தல் தேதி இருக்கும்.

ஏற்கனவே ஜாக்டோ – ஜியோ குழுவினர் 12 விதமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். நேற்றுகூட இதுதொடர்பாக ஆலோசனை நடத்தினோம். இன்றும் ஆலோசனை நடக்கவுள்ளது. ஆலோசனையின் முடிவுகளை முதல்வர் மற்றும் நிதித் துறை கவனத்திற்கும் கொண்டு செல்லப்படும்” என்று தெரிவித்தார்.

Chella

Next Post

அட மீண்டுமா..? இன்று 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை..!! வானிலை மையத்தின் அறிவிப்பால் மக்கள் பீதி..!!

Tue Jan 9 , 2024
தமிழ்நாட்டில் இன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”வடதமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும் இன்று தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் […]

You May Like