fbpx

மாணவர்களே இதை மிஸ் பண்ணாதீங்க..! இன்று ஆன்லைனில் தொடங்குகிறது முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு…

இந்தியாவில் எம்டி, எம்எஸ், டிப்ளமோ மற்றும் எம்டிஎஸ் ஆகியவற்றுக்கான இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகிறது. இந்திய தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) இதை நடத்துகிறது. நாடுமுழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களில் 50சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்தஇடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் இடங்கள் மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் இடங்களுக்கு மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) ஆன்லைனில் கலந்தாய்வு நடத்துகிறது.

2023-24-ம் கல்வி ஆண்டுன் எம்டி, எம்எஸ், டிப்ளமோ மற்றும் எம்டிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மாநில கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த 6-ம் தேதி தொடங்கி 17-ம்தேதியுடன் நிறைவடைந்தது. பரிசீலனைக்குப் பின்னர், எம்டி, எம்எஸ், டிப்ளமோ படிப்புகளுக்கான அரசுஒதுக்கீட்டு இடங்களுக்கு 7,526 விண்ணப்பங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 3,036 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதன்படி எம்டி, எம்எஸ், டிப்ளமோ மற்றும் எம்டிஎஸ் ஆகிய முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு https://www.tnhealth.tn.gov.in/, https://tnmedicalselection.net/ என்ற சுகாதாரத் துறை இணையதளங்களில் இன்று தொடங்குகிறது.

Kathir

Next Post

சிறு நகரங்கள் முதல் சிறு கிராமப் பகுதிகள் வரை ஒயிட் லேபிள் ATM...! மத்திய அரசு முக்கிய அறிவிப்பு...!

Mon Aug 7 , 2023
மூன்றாம் நிலை முதல் ஆறாம் நிலை வரையிலான சிறு நகரங்கள் முதல் சிறு கிராமப் பகுதிகள் வரை அதிக கவனம் செலுத்தி நாட்டில் இப்பகுதிகளில் ஏடிஎம் சேவைகளை அதிகரிக்க, வங்கி சாரா நிறுவனங்கள் நாட்டில் ஒயிட் லேபிள் ஏடிஎம்-களை அமைக்கவும், இயக்கவும் ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அனுமதித்துள்ளது. வங்கிகள் வழங்கும் அட்டைகளின் (டெபிட் / கிரெடிட் / ப்ரீபெய்ட்) அடிப்படையில் இந்தியாவில் உள்ள வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு டபிள்யூ.எல்.ஏ-க்கள் வங்கி சேவைகளை […]

You May Like