தமிழகத்தை பொறுத்தவரையில் பள்ளி வயது குழந்தைகள் அனைவருக்கும் நிச்சயமாக கல்வி அறிவு கிடைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது. அதற்காக பல நல்ல திட்டங்களையும், முயற்சிகளையும் பள்ளி கல்வித்துறை செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தான் தமிழகத்தில் எழுந்த படிக்க தெரியாத பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 3 மாத காலம் சிறப்பு பயிற்சி வழங்குவதற்கு பள்ளி கல்வித்துறை ஒரு புதிய உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. பள்ளிக் கல்வித் துறை தரப்பில் இருந்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்கள் பலர் எழுத, படிக்க தெரியாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியை தற்போது இருந்தே தொடங்குமாறு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி இருக்கிறது அத்துடன் எழுத படிக்கத் தெரியாத மாணவர்களுக்கு 3 மாத கால சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும் என்றும் அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.