கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று வைரஸ் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கிடையே, கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் படிப்புக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படித்து வந்தாலும், அவர்களும் கல்விக் கட்டணத்தை செலுத்துவதில் இருந்து தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ”கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்து பாதிக்கப்பட்ட குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்துக் கொண்டிருந்தால் அவர்களுக்கும் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்கள் அதே பள்ளியில் கல்வி பயில்வதை பள்ளிகள் உறுதி செய்திட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.