fbpx

பேருந்தில் கேட்பாரற்று கிடந்த நகை பை..நேர்மையாக போலீசிடம் கொடுத்த மாணவிகளுக்கு குவியும் பாராட்டு

பேருந்தில் கண்டு எடுக்கப்பட்ட நகை பையை ஆசிரியரிடம் தூத்துக்குடி காவல்நிலையத்தில் ஒப்படைத்த மாணவிகளை போலீசார் பாராட்டியுள்ளனர்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஏரல் பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்  9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மைக்கேல் சாதனா, பவித்ரா தேவி . சிறுத்தொண்டநல்லூர் என்ற ஊருக்கு அரசு பேருந்தில் சென்றனர். அப்போது பேருந்துக்குள் ஒரு பை கிடந்துள்ளதை பார்த்துள்ளனர். கேட்பாரற்று கிடந்த அந்தை பையை எடுத்து பார்த்தபோது, அதில், தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. உடனே அந்த பையை பத்திரமாக எடுத்துக் கொண்டு பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜிலா மேரியிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதையடுத்து, தலைமை ஆசிரியர் அந்த மாணவிகளை அழைத்து சென்று ஏரல் காவல்நிலையத்திற்கு சென்றார்.பேருந்தில் எடுக்கப்பட்ட நகை பையை போலீசாரிடம் அவர்கள் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த நகை பை திருவழுதிநாடார்விளை சேர்மன் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமி என்ற மூதாட்டிக்கு சொந்தமானது என தெரியவந்தது. அவரை காவல்நிலையம் அழைத்து வந்து பையை ஒப்படைத்தனர்.

நல்ல பழக்கங்கள் பள்ளி படிக்கும்போதே கற்றுக் கொண்ட அந்த மாணவிகளுக்கு காவல் உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் சால்வை அணிவித்து பாராட்டினார். நகையை எடுத்துக்கொண்டுவேறு யாரிடமும் தராமல் அல்லது அதை தன்னுடைமையாக்கிக்கொள்ளாமல் காவல்துறையிடம் வந்து நேர்மையாக கொடுத்தமைக்கு ஆசிரியர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Next Post

’’நானே வருவேன் திரைப்படத்தின் பாடல் வெளியீடு ’’...’’வீரா , சூரா ’’ ஹெட்போன் போட்டுக்கிட்டு கேளுங்க ….

Wed Sep 7 , 2022
’’நானே வருவேன் திரைப்படத்தின் பாடல் சமூக வலைத்தலங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் திரும்ப திரும்ப இதே பாடலை கேட்டு வருவதாக வீடியோ ஷேர் செய்துள்ளனர். செல்வராகவன் இயக்கி , தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ளது நானே வருவேன் திரைப்படம் . வரும் 30ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் . இன்று வீரா சூரா என்ற பாடல் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது. […]

You May Like