அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதில் சிக்கல் இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பில்; 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளன. இந்தத்தேர்வினை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 27 லட்சம் பேர் எழுத இருக்கின்றனர். இந்த நிலையில், அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி கிடையாது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது எனவும், வேறு பள்ளிகள் மூலமாக அவர்கள் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.