fbpx

மாணவிகளே மாதந்தோறும் ரூ.1,000 ரெடியா இருக்கு..!! பதிவு பண்ணிட்டீங்களா..? யாருக்கெல்லாம் கிடைக்கும்..?

தமிழ்நாட்டில் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் இளங்கலை பட்டப்படிப்புகளில் 1,11,300 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு ஆன்லைன் கலந்தாய்வு நடத்தி தான் மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒருவேளை மீதி காலி இடங்கள் இருந்தால் நேரடி கலந்தாய்வு மூலம் அந்தந்த கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படும். அப்படித்தான் இந்த முறை கல்லூரிகளில் மாணவ மாணவியர் சேர்க்கை நடந்து வருகிறது.

அதன்படி, அரசு கலை கல்லூரிகளில் சேர்ந்து இருக்கும் 56 ஆயிரத்து 7 பேரில், 27 ஆயிரத்து 608 மாணவிகள் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. புதுமை பெண் திட்டம் என்றால் என்ன? யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்? 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியிலேயே படித்து தற்போது கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வித் திட்டத்தின்கீழ் புதுமைப் பெண் திட்டம் முதலமைச்சர் முக.ஸ்டாலினால் கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி, ஏழை பெண்கள் உயர்க்கல்வி படித்தால் மாதம் 1000 ரூபாய் நிச்சயம் கிடைக்கும். முன்னதாக இந்த திட்டம் அதிமுக ஆட்சி காலத்தில் வேறு மாதிரி இருந்தது. ஆனால், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இந்த திட்டத்தை அடியோடு மாற்றியது. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர் உயர்கல்வி பயில வேண்டும் நோக்கில் திட்டத்தை மாற்றியது. அதன்படியே 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் உயர் கல்வியில் சேர்ந்தால் அவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவி தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த திட்டம் காரணமாக அரசு பள்ளி மாணவிகள் பலர் உயர்கல்வி சேர்ந்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் பயின்று அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதிக் கல்லூரிகளில் தங்களது உயர் கல்வியைத் தொடரும் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க https://penkalvi.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதில் பதிவு செய்திருந்த மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் நேரடியாக அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தான் இந்த ஆண்டு 27,000 மாணவிகளுக்கு 1,000 ரூபாய் கிடைக்க போகிறது.

Chella

Next Post

”பிரதமர் மோடி தலைமையில் சேவை செய்யணும்”..!! பாஜக-வில் இணைந்தார் விஜய் பட நடிகை..!!

Thu Aug 3 , 2023
டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலங்கானா மாநிலத் தலைவர் ஜி கிஷன் ரெட்டி, தேசிய பொதுச்செயலாளர் தருண் சங்க் ஆகியோர் முன்னிலையில் நடிகை ஜெயசுதா, பாஜகவில் இணைந்து கொண்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள ஜெயசுதா, சுமார் 50 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். கடந்த பொங்கலுக்கு வெளியான நடிகர் விஜய்யின் ’வாரிசு’ படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்திருந்தார். […]

You May Like