fbpx

ஆகஸ்ட் 14ஆம் தேதி மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும்..

சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் முதலமைச்சர்களின் பிறந்த நாளன்று இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவதுபோல் இனி வரும் காலங்களில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாளன்றும் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என அஅரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால், மாணவர்களுக்கு தற்போது ஆகஸ்ட் 14ஆம் தேதி இனிப்பு பொங்கல் வழங்கப்பட இருக்கிறது.

ஆகஸ்ட் 14ஆம் தேதி மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வர தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும், மேலும் சுவையான சக்கரை பொங்கல் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Kathir

Next Post

கேரளா இல்ல இனி என் பெயர் கேரளம்..!

Thu Aug 10 , 2023
கேரளாவை ஆளும் இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து மாநிலத்தின் பெயரை கேரளம் என பெயர் மாற்றம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் அரசியல் சாசனம் மற்றும் ஆவணங்களில் மாநிலத்தின் பெயர் ‘கேரளம்’ என மாற்றம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 7ம் தேதி கேரளாவில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் கேரளாவின் பெயரை மாற்றம் செய்வதற்கான தீர்மானத்தை சட்டசபையில், முதலமைச்சர் பினராயி விஜயன் கொண்டு வந்தார். அதே […]

You May Like