fbpx

’இனி மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கிடையாது’..! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

1, 2ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் ( Home Work ) தரக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இதனை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் 1 மற்றும் 2ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது தடை விதித்துள்ள நிலையில், அதை முறையாக அமல்படுத்த வேண்டும். பள்ளிகளில் பறக்கும் படையைக் கொண்டு ஆய்வு செய்து 1, 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தராமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆய்வுக்குப் பின் வீட்டுப்பாடம் தரப்பட்டதா? இல்லையா? என்பதை அறிக்கையாக சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

’இனி மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கிடையாது’..! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

முன்னதாக, மாணவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டுப்பாடம் தரப்படும் போது, அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்து முடிக்குமாறு ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் கல்வித் துறை ஏற்கனவே அறிவுறுத்தியது. மாணவர்களுக்கு வழங்கப்படும் வீட்டுப்பாட விவரம், மாணவர்கள் சமர்ப்பிக்கும் விவரம் போன்றவற்றை உரியமுறையில் பராமரிக்கவும் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Chella

Next Post

இந்தியாவில் 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை...! உயிரிழப்பு எண்ணிக்கை எவ்வளவு...?

Tue Aug 16 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 8,813 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 29 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 15,040 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
இந்தியாவில் புதிய கொரோனா அலை உருவாகிறதா..? ’தப்பிக்கவே முடியாது’..!! ’மக்களே எச்சரிக்கையா இருங்க’..!!

You May Like