ஜூலை 8 ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மணிப்பூர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மெய்தெய் சமூகத்தினர் மற்றும் பழங்குடியின சமூகத்தினரிடையே கடந்த மே 3 ஆம் தேதி ஏற்பட்ட மோதல் 2 மாதங்கள் தாண்டி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த கலவரத்தை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் மெய்தெய் சமூகத்தினர் தங்களது உரிமைக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். அதாவது, மெய்தெய் சமூகத்தினரை பழங்குடியின சமூகத்தில் சேர்த்துக்கொண்டால் தங்களின் உரிமைகள் ரத்து செய்யப்படும் எனவும் பழங்குடியினர் உரிமைக்குரல் எழுப்பி வருகின்றனர்.
மேலும், இந்த கலவரத்தினால் மாநிலத்தில் உள்ள அனைத்து வாகனங்கள், வீடுகள், வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களும் அடித்து நொறுக்கப்பட்டு மிக பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்நிலையில், மணிப்பூர் கலவரம் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவலும் பரவி வருவதால் இணைய சேவை ரத்து செய்யப்பட்டு வந்தது. அந்த வகையில், தற்போது ஜூலை 5 ஆம் தேதி வரைக்கும் இணைய சேவை தடை நீட்டிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரையிலும் கலவரம் கட்டுக்குள் வராத காரணத்தினால் மணிப்பூர் அரசு ஜூலை 8 ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவித்துள்ளது.