fbpx

மாணவர்கள் கையில் மடிக்கணினி விளையாடிய காலம்போய் போதைப்பொருள் விளையாடும் நிலை!… எடப்பாடி பழனிசாமி விளாசல்!

EPS: முதல்வர் ஸ்டாலின் பொய்யைத் தவிர எதுவுமே பேசுவதில்லை. இவரது ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பொம்மை முதல்வராக ஆட்சி செய்து வருகிறார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

தருமபுரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.அசோகனை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் வகையில் அக்கட்சி சார்பில் தருமபுரி வள்ளலார் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, “சில கட்சியினர் நேரத்துக்கும், சூழலுக்கும் ஏற்ப அவ்வப்போது கூட்டணி மாறுவர். தருமபுரி தொகுதியை தங்கள் கோட்டையாக அந்தக் கட்சியினர் நினைத்துள்ளனர். ஆனால், தருமபுரி அதிமுக-வின் கோட்டை. அனைத்து சாதியினருக்கும் உரிய பலன் கிடைக்கும் வகையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அரசாணை பிறப்பித்த கட்சி அதிமுக.

ஒரு கட்சியினர் வைத்த கோரிக்கையை ஏற்று, பல்வேறு தரப்பினருடனும் ஆலோசித்து இட ஒதுக்கீட்டை அதிமுக அரசு வழங்கியது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் என்று கூறும் கட்சியுடன் தற்போது கூட்டணி அமைத்துள்ளனர். இது சந்தர்ப்பவாத அரசியல். முதல்வர் ஸ்டாலின் பொய்யைத் தவிர எதுவுமே பேசுவதில்லை. இவரது ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை, கஞ்சா விற்பனை அதிகளவில் நடக்கிறது. அதை தடுக்க திறமையில்லாத பொம்மை முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். முந்தைய அதிமுக ஆட்சியில் மாணவர்கள் கைகளில் மடிக்கணினி விளையாடியது. ஆனால் இன்றைய ஆட்சியில் போதைப்பொருட்கள் விளையாடுகிறது.

Readmore: C-Voters: மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும்… 62 சதவீதம் பேர் ஆதரவு…!

Kokila

Next Post

பெரும் சோகம்...! ஆட்டோ மீது லாரி மோதியதில் பயணிகள் 6 பேர் பலி...!

Wed Apr 3 , 2024
உத்தரபிரதேச மாநிலத்தில் ஆட்டோ மீது லாரி ஒன்று மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் சித்ரகூடில், வேகமாக வந்த டிப்பர் லாரி ஆட்டோ ரிக்ஷா மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த பலர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 6 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று சொல்லப்படுகிறது. இந்த விபத்தில் மேலும் 2 பேர் படுகாயமடைந்து மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை […]

You May Like