fbpx

மாணவர்கள் அதிர்ச்சி..!! 3, 5, 8ஆம் வகுப்புகளுக்கும் இனி பொதுத்தேர்வு..? அமைச்சர் பொன்முடி தகவல்..!!

தமிழ்நாட்டில் 3, 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுமா..? என்பது குறித்து அமைச்சர் பொன்முடி விளக்கமளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையே, ஒரு சில பள்ளிகளில் மாணவர்கள் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதால் 11ஆம் வகுப்பு பாடங்களை மாணவர்களுக்கு நடத்தாமல் நேரடியாக 12ஆம் வகுப்பு பாடங்களை கற்பித்து வந்தனர்.

இதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டும் பள்ளிகள் பின்பற்றாத நிலையில், அரசு 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வினை அறிமுகம் செய்தது. இந்நிலையில், 3,5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு வைக்க வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் பொன்முடி, அதாவது 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வைத்தால் மாணவர்களின் கல்வி அதிகளவில் பாதிக்கப்படும் எனவும், மதிப்பெண்ணிற்காக மாணவர்கள் படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

Chella

Next Post

விவசாயத்திற்கு இலவச மின்சாரம்..!! இனி தப்பிக்கவே முடியாது..!! மின்சார வாரியம் அதிரடி உத்தரவு..!!

Mon Oct 30 , 2023
தமிழ்நாடு முழுவதும் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் நடைமுறையில் உள்ளன. இதில், விவசாயத்திற்கு முழுவதும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இலவச மின்சார திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு குறைந்தபட்சம் 40,000 சர்வீஸ்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு அரசு திடீர் சர்ப்ரைஸ் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, புதிதாக கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தமானது 2020 ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு பிறகு விண்ணப்பம் செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், அதற்கு முன்பு […]

You May Like