fbpx

மாணவர்களே நோட் பண்ணிக்கோங்க..!! 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வுகள் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது காலாண்டுத் தேர்வுகள் முடிந்து, இரண்டாம் பருவம் தொடங்கியுள்ள நிலையில், பொதுத்தேர்வுக்கு திட்டமிட்டு மாணவர்கள் தயாராகும் வகையில், முன்கூட்டியே தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு வருகிறது.அந்த வகையில், நடப்பு கல்வியாண்டுக்கான 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் :

10ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்.22ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 28இல் முடிவடைகிறது. மேலும், பொதுத்தேர்வு மார்ச் 28இல் தொடங்கி ஏப்ரல் 15இல் முடிகிறது. இதையடுத்து, பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வரும் மே 19ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்:

11ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்.15ஆம் தேதி தொடங்கி, பிப்.21இல் முடிவடைகிறது. பொதுத்தேர்வு மார்ச் 5ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27இல் முடிகிறது. இதையடுத்து, பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வரும் மே 19இல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்:

12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 14இல் முடிவடைகிறது. மேலும், பொதுத்தேர்வு மார்ச் 3 தேதி தொடங்கி, 25ஆம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து, பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வரும் மே 9ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, 2ஆம் பருவத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வரும் நிலையில், அரையாண்டுத் தேர்வு வரும் டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More : தொடங்கியது பருவமழை..!! மக்களே இந்த தவறையெல்லாம் பண்ணாதீங்க..!! ஆபத்து..!!

English Summary

10th class practical exam will start on 22nd February and end on 28th February.

Chella

Next Post

சென்னையில் பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற 300க்கும் மேற்பட்ட ஆயுதப்படை காவலர்கள் தயார்...!

Mon Oct 14 , 2024
More than 300 Armed Forces Guards trained in disaster rescue are ready in Chennai.

You May Like