fbpx

மாணவர்களே காலாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியானது..! விடுமுறையும் அறிவிப்பு..!

1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுக்கான அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்ககம் வெளியிட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறாமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளும் ஆன்லைன் வழியாகவே நடத்தப்பட்டது. பின்னர் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, இந்த கல்வியாண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதையடுத்து, வரும் செப்டம்பர் மாதத்தில் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலும், 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை இயக்ககம் வெளியிட்டுள்ளது. மேலும் காலாண்டு தேர்வு விடுமுறை குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களே காலாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியானது..! விடுமுறையும் அறிவிப்பு..!

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 26 முதல் 30ஆம் தேதி வரை காலாண்டுத் தேர்வு நடைபெறும். 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 23 முதல் 30ஆம் தேதி வரை காலாண்டுத் தேர்வு நடைபெறும். அக்டோபர் 1 முதல் 5ஆம் தேதி வரை காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை உள்ளிட்டவற்றுக்காக விடுமுறை அளிக்கப்படுகிறது. அக்டோபர் 6ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

கொலை செய்து தலையை வெட்டி ரோட்டில் வைத்து சென்ற கொடூரம்; திருவெறும்பூர் அருகே பரபரப்பு..!

Sun Aug 21 , 2022
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அருகே உள்ள பனையக்குறிச்சி பகுதியில் வசித்து வருபவர் ஜெயபால்(43). இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவருக்கும் மழைநீர் வடிகால் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை ஜெயபால் கிராமத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த சுதாகர் மற்றும் அவரது உறவினர்கள் அரிவாள், […]

You May Like