இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில நேற்று இரவு மழை வெளுத்து வாங்கியது. இரவு 7 மணிக்கு தொடங்கிய கனமழை இரவு முழுவதும் நீடித்தது.
இந்நிலையில், கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 2 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
காலையில் இருந்து மழை பெய்து கொண்டிருந்தாலும், விடுமுறை விடப்படவில்லை. எனவே, மாணவர்கள் முன்னெச்சரிக்கையாக குடை, ரெயின் கோட் ஆகியவற்றை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.