fbpx

மாணவர்களே..!! விண்ணப்பிக்க நாளையே கடைசி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! அப்புறம் ரூ.1,000 செலுத்தனும்..!!

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில், கடந்த மே 8ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இதில் மொத்தம் 47 ஆயிரத்து 934 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை. இதனைத் தொடர்ந்து தேர்வில் தோல்வியடைந்தவர்கள் மற்றும் தேர்வுக்கு செல்லாத மாணவர்களுக்கு ஜூன் 19 முதல் 26 ஆம் தேதி வரை துணைத்தேர்வு நடைபெற உள்ளது.

இந்த தேர்வு எழுத மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளிலும் தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களிலும் மே 11ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், துணைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 17ஆம் தேதி அதாவது நாளை மாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ளது. நாளை விண்ணப்பிக்க தவற ஓர் சிறப்பு அனுமதி திட்டத்தில் உரிய கூடுதல் கட்டணத்துடன் சனிக்கிழமை வரை இணையவழியில் ரூ.1,000 செலுத்தி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

உஷார்..!! யூடியூப் வீடியோவை லைக் செய்து சம்பாதிக்கலாம்..!! வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்..!! பறிபோன ரூ.42 லட்சம்..!!

Tue May 16 , 2023
சமீப காலமாக ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். மோசடியாக உங்கள் அக்கவுண்ட்டில் பணம் செலுத்தப்பட்டுவிட்டது என்று மெசேஜ் வருகிறது. அதோடு ‘மேலும் தகவல்களுக்கு’ […]

You May Like