fbpx

பேருந்துக்காக காத்திருந்த மாணவிகள்..!! நைசாக பேசி காரில் அழைத்துச் சென்று பலாத்காரம்..? கல்லூரி உதவி பேராசிரியர் வெறிச்செயல்..!!

தற்போதைய காலகட்டத்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. நீதித்துறை மற்றும் காவல்துறை தண்டனை வழங்கினாலும், குற்றங்கள் குறைந்தபாடில்லை. அந்த வகையில், தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் டேனி பால்.

இவர், கூடலூரில் செயல்பட்டு வரும் அரசு கலை அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர் கல்லூரி பணியில் இருந்து நீக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், உப்பட்டி பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த 2 பள்ளி மாணவிகளை டேனி பால், வீட்டில் இறக்கி விடுவதாக கூறி, தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார்.

அதில் ஒரு மாணவியை அவரது வீட்டில் டேனி இறக்கிவிட்ட நிலையில், மற்றொரு மாணவி காரில் இருந்துள்ளார். அவருக்கு டேனி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரிடம் இருந்து தப்பித்த மாணவியை அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுனர் பத்திரமாக மீட்டு மாணவியின் வீட்டில் ஒப்படைத்தார். இச்சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து, டேனி பாலை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Read More : ஜனவரி முதல் மீண்டும் ஹெல்மெட் கட்டாயம்..!! தவறினால் எவ்வளவு அபராதம் தெரியுமா..? போக்குவரத்து போலீசார் அதிரடி..!!

English Summary

Danny dropped one of the students off at her house, while another student was in the car. Danny sexually harassed her.

Chella

Next Post

பார்சி உடையில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் பெண்.. டாடா குடும்பத்தின் வைரம்..!! யார் இந்த மெஹர் பாய் டாடா?

Tue Dec 17 , 2024
First woman to participate in Olympics in Parsi dress.. Diamond of Tata family..!! Who is this Meher Bhai Tata?

You May Like