fbpx

பாதியில் விலகும் மாணவர்களின் முழு கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டும்!… உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவு!

கல்லூரியில் சேர்க்கையை ரத்து செய்யும் மாணவர்களுக்கு 100% கட்டணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகளில் சேர்ந்து பின்னர் விலகும் மாணவர்களுக்கு, அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதிக்குள்ளாக கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என்றும், அக்டோபர் 30ம் தேதிக்குள் கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களிடம் ரூ.1000 சேவை கட்டணம் பிடித்தம் செய்ய வேண்டும் என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 30ஆம் தேதிக்குள்ளாக கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என்றும், அக்டோபர் 30ம் தேதிக்குள் கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களிடம் ரூ.1000 சேவை கட்டணம் பிடித்தம் செய்ய வேண்டும் என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது. மாணவர் சேர்க்கையை ரத்து செய்த பிறகும் அல்லது கல்லூரியில் இருந்து விலகிய பிறகும் உயர் கல்வி நிறுவனங்கள் கட்டணத்தை திரும்ப வழங்காதது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து புகார்கள் வந்ததையடுத்து, யுஜிசி சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

Kokila

Next Post

சென்னை நேயர்களே தயாரா…..? மக்களை தேடி வருகிறார் மேயர் அனைவரும் ரெடியா இருங்க….!

Wed Jul 5 , 2023
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற நகராட்சி தேர்தலில் சென்னை மாநகர மேயராக பிரியா ராஜன் தேர்வு செய்யப்பட்டார். இதுவரையில் தமிழக அரசியல் சரித்திரத்திலேயே 28 வயதில் மேயரானது இவர் மட்டும்தான். அதோடு சென்னையின் முதல் பெண் மேயர் என்ற பெயரையும் இவர் பெற்றார். அதோடு இவருக்கு அரசியல் அனுபவம் அவ்வளவாக இல்லை என்றாலும் மூத்த அமைச்சர்கள் பலர் இவர் அருகில் இருந்து இவரை வழிநடத்த தொடங்கினர். அதன் பிறகு […]

You May Like