fbpx

’2 மாணவிகளுடன் ஒரே நேரத்தில் உல்லாசம்’..!! திருமணத்தை மறைத்து பங்களாவில் பாய்ந்த பிரபல ரவுடி..!!

திருமணத்தை மறைத்து இன்ஸ்டாகிராமில் பழக்கமான பிளஸ் 2 மாணவி மற்றும் அவரது தோழி ஆகியோரை காதல் வலையில் வீழ்த்தி, சென்னைக்கு அழைத்துச் சென்று ஒரே வீட்டில் உல்லாசமாக வசித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில், புதுக்கடை பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், பிளஸ் 2 படித்து வருகிறார். இதேபோல் திருவட்டார் பகுதியை சேர்ந்த மாணவியும் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி இவர்கள் 2 பேரும் திடீரென்று மாயமாகினர். இதையடுத்து குடும்பத்தினர் இருவரையும் பள்ளி மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்துள்ளனர். ஆனால், எங்கு தேடியும் மாணவிகள் கிடைக்கவில்லை. இதையடுத்து, இருவரின் பெற்றோர்களும் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், மாணவிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

’2 மாணவிகளுடன் ஒரே நேரத்தில் உல்லாசம்’..!! திருமணத்தை மறைத்து பங்களாவில் பாய்ந்த பிரபல ரவுடி..!!

இதற்கிடையே, விசாரணையின்போது சில தகவல்கள் கிடைத்தன. அதாவது மாயமான மாணவிகள் இருவரும் அதே நாளில் வேர்கிளம்பி குட்டக்குழி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் செல்போனில் பேசியது தெரியவந்தது. அந்த வாலிபர் பற்றி விசாரித்தபோது அவரும் வீட்டில் இருந்து மாயமாகி உள்ளார். இது முக்கிய தகவலாக பார்க்கப்பட்டதல், மாணவிகள் மாயமான விஷயத்தில் அந்த நபருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து, அந்த வாலிபரின் செல்போன் எண்ணின் சிக்னலை போலீசார் கண்காணித்தனர். அப்போது, சென்னை திருவான்மியூர் பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு விரைந்த தனிப்படை போலீசார், திருவான்மியூர் பகுதியில் சொகுசு பங்களாவில் பதுங்கியிருந்த வாலிபர் மற்றும் இரு பள்ளி மாணவிகளையும் கண்டுபிடித்தனர்.

’2 மாணவிகளுடன் ஒரே நேரத்தில் உல்லாசம்’..!! திருமணத்தை மறைத்து பங்களாவில் பாய்ந்த பிரபல ரவுடி..!!

பின்னர், 3 பேரும் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட்டது. விசாரணையில், அந்த வாலிபர் குட்குழி பகுதியை சேர்ந்த 22 வயதான வினு என்பதும், பிளம்பர் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. அதோடு கொலை வழக்கு, கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும், இவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன் பிளஸ் 2 படித்த மாணவி ஒருவரை கடத்தி திருமணம் செய்த நிலையில், 2 குழந்தைகளும் உள்ளனர்.

’2 மாணவிகளுடன் ஒரே நேரத்தில் உல்லாசம்’..!! திருமணத்தை மறைத்து பங்களாவில் பாய்ந்த பிரபல ரவுடி..!!

மனைவி, 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், ரவுடி வினுவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் புதுக்கடையை சேர்ந்த பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தனக்கு திருமணம் நடந்து குழந்தைகள் இருப்பதை மறைத்து மாணவியுடன் பேசி வந்தார். மேலும், மாணவியை காதலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் அடிக்கடி சந்தித்துள்ளனர். இதற்கிடையே, தான் திருவட்டார் பகுதியை சேர்ந்த மாணவியின் தோழியுடனும் வினு பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டார். இருவருடனும் அவர் உல்லாசமாக இருந்துள்ளார்.

’2 மாணவிகளுடன் ஒரே நேரத்தில் உல்லாசம்’..!! திருமணத்தை மறைத்து பங்களாவில் பாய்ந்த பிரபல ரவுடி..!!

இதையடுத்து இரு மாணவிகளையும் காதல் வலையில் வீழ்த்திய வினு, அவர்களுடன் வெளியூர் சென்று குடும்பம் நடத்த திட்டமிட்டார். இதையடுத்து இருவரையும் ஒன்றாக அழைத்துச் சென்று ஜாலியாக இருந்த வினு, சென்னைக்கு அழைத்து வந்து ஒரே வீட்டில் குடும்பம் நடத்தியபோது போலீசில் சிக்கிக்கொண்டார். இதையடுத்து வினுவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட இரு மாணவிகளும் மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Chella

Next Post

#Alert..!! 8 மாவட்டங்களில் மிக கனமழை..!! தமிழக மக்களே உஷார்..!! வானிலை மையம் எச்சரிக்கை..!!

Wed Nov 2 , 2022
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், […]
#Alert..!! 8 மாவட்டங்களில் மிக கனமழை..!! தமிழக மக்களே உஷார்..!! வானிலை மையம் எச்சரிக்கை..!!

You May Like