சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிலும் மானிய விலையில் ஜெனரேட்டர் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலையான மேம்பாட்டிற்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனங்கள் அதிக அளவு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி வருவதால், இதன் வளர்ச்சிக்காக பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது நிலவி வரும் மின்பற்றாக் குறையில் இருந்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், தொடர்ந்து உற்பத்தியை பெருக்குவதற்காகவும் ஜெனரேட்டர் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
அதாவது, தற்போது தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையால் வழங்கப்படும் “ஜெனரேட்டர் மானியம்” குறித்து உங்களுக்கு தெரியுமா..? இந்த திட்டத்தின் கீழ் 320 KVA திறன் வரை உள்ள ஜெனரேட்டரின் விலையில் 25% அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. மேலும், புதிய அல்லது ஏற்கனவே திறக்கப்பட்ட அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிலும் மானிய விலையில் ஜெனரேட்டர் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மானிய விலை ஜெனரேட்டர் பெற விரும்பும் நிறுவனங்கள் https://www.msmeonline.tn.gov.in/ என்ற தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சென்று விண்ணப்பித்து பயன்பெறலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.