fbpx

இவ்வளவு பெரிய மீசையா?… 3 தசாப்தங்களாக மீசையை வளர்த்துவரும் அமெரிக்கர்!… கின்னஸ் சாதனை படைத்து அசத்தல்!

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவை சேர்ந்த பால் ஸ்லோசர் என்பவர், உலகில் உயிருடன் இருக்கும் நபர்களில் மிக நீளமான மீசை வைத்திருப்பவர் என்கிற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் வசிப்பவர் பால் ஸ்லோசர். இவர் கடந்த ஆண்டு நவம்பர் 12 -ஆம் தேதி, காஸ்பரில் நடைபெற்ற அமெரிக்க தேசிய தாடி மற்றும் மீசை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். அப்போது அவரது மீசை அளவிடப்பட்டதில், மீசையின் நீளம் 63.5 செ.மீ. இருந்துள்ளது. கடந்த 3 தசாப்தங்களாக, அவர் தனது மீசையை வளர்த்து வந்துள்ளார். இறுதியில் அவரது கடின உழைப்புக்கு வெற்றி கிடைத்தது. அவரது மீசையின் அகலம் 2 அடி 1 அங்குலம் (63.5 செ.மீ.). அதாவது இவரது மீசையின் நீளம் கிட்டத்தட்ட 4 மாத குழந்தையின் நீளத்திற்கு சமமாகிவிட்டது என்றே கூறலாம்.

மேலும், இவருக்கு முன்னதாக இவரை விட பெரிய மீசை வைத்து சாதனை படைத்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால், உலகில் உயிருடன் இருக்கும் நபர்களில் மிக நீளமான மீசை வைத்திருப்பவர் என்கிற பெருமையை பால் ஸ்லோசர் பெற்றுள்ளார். உலகில் தற்போது வேறு எந்த நபருக்கும் இவ்வளவு நீளமான மீசை இல்லை.இதனால் அவருடைய பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் மீசையுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Kokila

Next Post

கோழிக்கறியை தனியாக சாப்பிட்ட மகன்!... ஆத்திரத்தில் தீர்த்துக்கட்டிய தந்தை!... கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!

Fri Apr 7 , 2023
கோழிக்கறியை தனியாக சாப்பிட்டதால் ஆத்திரமடைந்த தந்தை, மரக்கட்டையால் தாக்கியதில் மகன் உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தின் சுல்லியா தாலுக்காவில் உள்ள குட்டிகர் என்ற பகுதியை சேர்ந்தவர் ஷீனா. குடும்பத்துடன் வசித்து வரும் இவருக்கு 32 வயதில் சிவராமன் என்ற மகனும் உள்ளார். இந்தநிலையில், கடந்த செவ்வாய் அன்று வீட்டிற்கு கோழி இறைச்சி எடுத்துவந்துள்ளார். இதையடுத்து, வீட்டில் உள்ளவர்களிடம் கோழி இறைச்சியை சமைக்க […]

You May Like