fbpx

’காமத்தின் உச்சத்தை அடைய இப்படி ஒரு கேவலமான செயல்’..!! ’தமிழ் சினிமா நாறிப்போய் கிடக்கிறது’..!! கொந்தளித்த சனம் ஷெட்டி..!!

சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகவே சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் ஸ்ருதி நாராயணனின் வீடியோ தான் வைரலாகி வருகிறது. சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் இவர், வீடியோ காலில் ஒரு நபர் சொல்வதை எல்லாம் செய்வது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. ஆரம்பத்தில் இந்த வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், சிலர் வீடியோவின் லிங்க் கேட்டு இணையத்தில் புள்ளி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை அது ஏஐ என்பது போன்று ஒரு இன்ஸ்டா ஸ்டோரியை நடிகை ஸ்ருதி பகிர்ந்திருந்தார். அவர் பதிவு வெளியிட்ட அடுத்த நாளே அவருடைய மற்றொரு வீடியோவும் வெளியானது. அந்த வீடியோவில் இருப்பது உண்மையில் அவராக இருந்தால் கூட அந்த நடிகையின் வீடியோவை பகிர்ந்தது தவறுதான். அதனால் சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தான், இந்த வீடியோ குறித்து நடிகை சனம் ஷெட்டி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ”சீரியல் நடிகை ஸ்ருதி நாராயணனின் ஆடிஷன் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று அவர் சொன்ன பிறகும் அந்த வீடியோவை பார்க்க பலரும் துடித்துக் கொண்டிருக்கின்றனர். உங்களிடம் அந்த வீடியோ இருந்தால் அந்த வீடியோவை யாருக்கும் அனுப்பாமல் டெலிட் செய்து விடுங்கள்.

காமத்தின் உச்சத்தை அடைவதற்காக இப்படி கேவலமாக அடுத்தவர்களின் அந்தரங்கத்தை எட்டிப் பார்க்க சிலர் இருக்கின்றனர். அவர்களுக்கு நீங்களே தீனி போட வேண்டாம். ஒருவேளை அந்த பெண் தவறு செய்திருந்தால் அவர் விக்டிம் கிடையாது. ஆனால், அதே பெண் தவறு செய்யாமல் அவர் சொன்னதுபோல அது ஏஐ வீடியோவாக இருந்தால் அந்த பெண் தான் பாதிக்கப்பட்டவர்.

தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தில் இருக்கும் பிரபலங்களிடம் நான் நடிகைகள் சார்பாக ஒன்று கேட்டுக்கொள்கிறேன். தமிழ் சினிமா நாறிப்போய் கிடக்கிறது. உண்மையாக திறமையுள்ள நடிகைகளுக்கு சரியான வாய்ப்பு கொடுங்கள். அதை விட்டுவிட்டு தவறான பாதைக்கு நடிகைகள் செல்ல அனுமதிக்க வேண்டாம்” என ஆக்ரோஷமாக பேசியிருக்கிறார்.

Read More : பொதுத்தேர்வு முடியும் வரை சென்னையில் ஐபிஎல் போட்டி கிடையாது..? சட்டப்பேரவையில் ஒலித்த குரல்..!!

English Summary

An audition video of serial actress Shruti Narayanan is going viral on the internet.

Chella

Next Post

பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து.. 17 பேர் உடல் கருகி பலி.. பலர் காயம்..!! நெஞ்சை உலுக்கிய சோகம்

Tue Apr 1 , 2025
Gujarat: 17 killed, several injured in fire at firecracker factory in Banaskantha

You May Like