நாட்டில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். அவர்களுக்கு ஏற்றாற்போல் அவ்வப்போது ரயில்வேயில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், நிறைய பேர் அவற்றை பயன்படுத்துவதில்லை. ரயில் பயணம் செய்பவர்கள் ரயில்வே தொடர்பான விதிமுறைகள் மற்றும் சிறப்பு விதிகள் பற்றி தெரிந்து கொள்வது நல்லது. ரயில்களில் பயணம் செய்யும்போது சில ரயில்கள் மிகவும் தாமதமாக இயக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற நிலையில் ரயில்வே உங்களை ரயில்களில் பயணிக்க வைப்பது மட்டுமில்லாமல் அவர்களின் நிலையத்தில் பல ஆடம்பரமான அறைகளையும் வழங்குகிறது. அதில் நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். இந்த ஐந்து நட்சத்திர அறைகளை முன் பதிவு செய்ய வெறும் ரூ.40 மட்டுமே செலவாகிறது. நிறைய பேருக்கு இது போன்ற வசதி தெரியாமல் இருப்பதால் அவர்கள் பயன்படுத்தாமல் இருந்து வருகின்றனர். அதாவது ரயில்வே ஸ்டேஷனில் அன்றைய முன்பதிவு செய்ய முதலில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் எடுக்க வேண்டும்.
நீங்கள் பயணிக்கும் ரயில் உறுதி செய்யப்பட்ட பி என் ஆர் ரயில் நிலையத்தில் அன்றைய முன்பதிவு செய்ய தேவைப்படும் இந்த அறைகளை முன்பதிவு செய்ய (https://www.rr.irctctourism.com./#/home) என்ற இணையதளத்தை பார்வையிட வேண்டும். உங்கள் வசதிக்கேற்ப ஏசி மற்றும் ஏசி அல்லாத இரண்டையும் காணலாம். இந்த வசதிகள் பெரும்பாலும் குளிர் காலங்களில் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. ஏனென்றால் குளிர் காலத்தில் பனிமூட்டம் காரணமாக பல ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. அதனால் இந்த அறைகளுக்கான தேவை அதிகம் இருக்கும். இது போன்ற அறைகளின் வசதியைப் பெற ரூ.20 முதல் 40 வரை மட்டுமே செலவாகும். பொது டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இருப்பினும் உங்கள் பயணம் 500 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். வசதியின் பலன் மற்றும் முதலில் வருபவர்களுக்கு முதல் சேவை அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. மேலும் ரயில் நிலையங்களில் உள்ள இந்த இரண்டு அறைகளில் நாட்கள் முழுவதும் அதாவது 48 மணி நேரம் எந்த தடையும் இல்லாமல் தங்கிக் கொள்ளலாம். பெரும்பாலான பெரிய ரயில்வே ஸ்டேஷனில் இந்த ஓய்வு அறைகள் கிடைக்கிறது.