விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி தொடங்கிய சில வாரங்கள் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால், நாட்கள் செல்ல செல்ல விஜய் சேதுபதி பேசுவது எரிச்சலாக இருக்கிறது என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் விஜய் சேதுபதி தான் சரியாக இந்த நிகழ்ச்சியை கையாண்டு வருகிறார் என்று கூறி வருகின்றனர்.
ஆனால், விஜய் சேதுபதி எதிர் தரப்பில் இருக்கும் போட்டியாளர்களை அவர்கள் தரப்பு நியாயத்தை சொல்லவிடாமல் உடனே ஆஃப் பண்ணுவது, அவர்கள் தான் நினைப்பதை சொல்லவில்லை என்றால் அவர்கள் இரிடேட் ஆகுற மாதிரி ரியாக் செய்வது பார்க்கும் ரசிகர்களை கவரவில்லை என்பதும் பலருடைய கருத்தாக இருக்கிறது. குறிப்பாக, கடந்த வாரத்தில் மஞ்சரி மற்றும் அருண் பிரச்சனையில் விஜய் சேதுபதி அருணுக்கு ஆதரவாக மஞ்சரியை கடுமையாக சாடியிருந்தார்.
இந்நிலையில், பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர் சனம் ஷெட்டியும் நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். “அதில், பிக்பாஸ் கோடிக்கணக்கான ரசிகர்களை முழுமையாக ஏமாற்றியது. பாதிக்கப்பட்ட மஞ்சரியை இரக்கம் இன்றி அவமானப்படுத்துவது மற்றும் கொடுமைப்படுத்துபவர்களை எப்படி பாராட்டுவது? விஜய் சேதுபதி செய்தது தவறு. அருணை பாராட்டுவதற்காக மஞ்சரியை நோஸ்கட் பண்ணினார்.
விஜய் சேதுபதி சார் கருப்பு கண்ணாடி போட்டதால் அவருக்கு கண்ணு தெரியவில்லை போல. கண்ணு முன்னாடி அவ்ளோ பெரிய அநியாயம் நடக்கிறது. மஞ்சரியை மொத்த ஹவுஸ்மேட்டும் சேர்ந்து புல்லிங் பண்றாங்க, கார்னர் பண்றாங்க, ரவுடிசம் பண்றாங்க. இதை தட்டிக் கேட்க உங்களுக்கு மனசு வரலையா சார்? மஞ்சரியே வாய்விட்டு இதுதான் சார் நடந்தது என்று சொல்லுறாங்க. என்ன புரிஞ்சுக்கோங்க என்று கேட்டு விட்டாலும் உங்களுக்கு காது கேட்கலயா சார்?
3 மணி நேரம் சோ நடத்துறீங்க. பர்த்டே செலிப்ரேஷன் பண்ணுவதற்கு உங்களுக்கு நேரம் இருக்கு, லவ் லெட்டர் படிக்க நேரம் இருக்கு. தீபக் நேம் கிளியர் பண்றதுக்கு சாச்சனாவை அரை மணி நேரமா ரோஸ்ட் பண்றதுக்கு உங்களுக்கு டைம் இருக்கு. ஒன் டே.. நண்டே என்று இஷ்டத்துக்கு கவுஸ்மெட்டை ப்ளேம் பண்ண சத்யாவை சொல்றதுக்கு டைம் இருக்கு. ஆனால், மஞ்சரிக்கு சப்போர்ட்டிவா பேசுவதற்கு உங்களுக்கு அஞ்சு நிமிஷம் டைம் இல்லயா..?
புல்லி பண்றது தப்பு என்று உங்களுக்கு சொல்றதுக்கு மனசு வரலல்லா சார்? பல கோடி மக்கள் பாக்குற ஷோல இப்படி ஒரு அநியாயம் நடந்தும் அதை தட்டிக் கேட்கிறதுக்கு உங்களுக்கு முடியலன்னா உங்க கிட்ட என்ன சார் எதிர்பார்க்க முடியும்..? நீங்க மஞ்சரியை சப்போர்ட் பண்ணலைன்னா பிரச்சனை இல்ல. ஆனா, புல்லிங் கேங்கை பாராட்டுறீங்க பாருங்க அங்க தெரியுது உங்க ஸ்டாண்ட் எந்தப் பக்கம் இருக்குன்னு. நீங்க மஞ்சரியை சப்போர்ட் பண்ணலன்னா பரவாயில்லை. மஞ்சரியை சப்போர்ட் பண்ணதுக்கு நாங்க மக்கள் இருக்கிறோம் என் சப்போர்ட் மஞ்சுரிக்கு தான்” என்று சனம் ஷெட்டி பேசியிருக்கிறார்.
Read More : இவ்வளவு மலிவு விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரா..? இத்தனை வசதிகள் இருக்கா..? பேட்டரி தான் ஹைலெட்..!!