fbpx

பொது போக்குவரத்தில் இப்படி ஒரு செயலா..? ரயில் இருக்கையில் பயன்படுத்தப்பட்ட ஆணுறை..!! எங்கு தெரியுமா?

குறைந்த விலையில் ஒரு டீசன்ட்டான பயணத்தை ரயில் போக்குவரத்து கொடுக்கும் என்று மக்கள் எப்போதும் கூறப்படுவதுண்டு. ஆனால், எல்லா சமயங்களிலும் ரயில் பயணங்கள் இன்பங்களையும், உணர்வுகளையும் கொடுத்து விடாது என்பதை மும்பையில் நடந்த சம்பவம் உணர்த்தியிருக்கிறது.

அம்பர்நாத் ரயிலின் இருக்கையில் பயன்படுத்தப்பட்ட ஆணுறை ஒன்று பட்டவர்த்தனமாக கிடந்திருந்த நிகழ்வு பயணிகள் பலரையும் அதிர்ச்சிக்கும் திகைப்புக்கும் ஆழ்த்தியிருக்கிறது. சம்பவத்தின்படி மும்பையின் Currey Road-ஐ கடக்கும் போது அம்பர்நாத் லோக்கல் ட்ரெயின் இருக்கையில் ஆணுறை இருந்ததை பயணி ஒருவர் போட்டோ எடுத்து தனது ட்விட்டரில், மும்பை மத்திய ரயில்வே நிர்வாகம், இந்தியன் ரயில்வே, மத்திய ரயில்வே ஆகியவற்றை டேக் செய்து நடவடிக்கை எடுக்கச் சொன்னதோடு, மும்பை ரயில் பயணிகளை எச்சரிக்கும் விதமாக அதற்கான ட்விட்டர் பக்கத்தையும் டேக் செய்திருக்கிறார்.

அதில், கடந்த ஜனவரி 23ஆம் தேதி இரவு 9.40 மணிக்கு அந்த ஆணுறையை ரயிலின் சீட்டில் பார்த்ததாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்கும் படி மும்பை ரயில்வே போலீசாருக்கு மும்பை பிரிவுக்கான மத்திய ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ரயில் இருக்கையில் ஆணுறை கிடந்த அந்த பதிவை கண்ட பலரும் அதிர்ச்சிக்குள்ளானதோடு, உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். மேலும், எப்படி ஒரு பொது போக்குவரத்தில் இப்படியான செயலில் ஈடுபட்டிருக்க முடியும் என்றும் கேள்விகளை முன்வைத்துள்ளனர்.

Chella

Next Post

மெரினா கடற்கரை..!! பொதுமக்களுக்கு அனுமதியில்லை..!! தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!

Wed Jan 25 , 2023
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தலைவர்களின் நினைவிடங்களை பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 74-வது குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. சென்னையில் மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் நடைபெறுவது வழக்கமாகும். தற்போது அந்த இடத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே, இந்தாண்டு தமிழ்நாடு ஆளுநர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொள்ளும் குடியரசு தின […]
மெரினா கடற்கரை..!! பொதுமக்களுக்கு அனுமதியில்லை..!! தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!

You May Like