fbpx

இந்தியாவில் VLC மீடியா பிளேயருக்கு திடீர் தடை.. என்ன காரணம் தெரியுமா..?

பிரபலமான மீடியா பிளேயரான VLC மீடியா பிளேயர் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

VLC பிளேயர் இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது., ஆனால் இந்திய அரசாங்கமோ அல்லது நிறுவனமோ இந்தத் தடை குறித்த எந்த விவரங்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை. ஐடி சட்டம், 2000-ன் கீழ் இது அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. VLC மீடியா பிளேயரின் வலைத்தளத்தை திறக்கும்போது, ​​​​ஐடி சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டதாக அதில் காட்டுகிறது..

VLC மீடியா பிளேயர் இணையதளம் மற்றும் பதிவிறக்க இணைப்புகளை அணுகுவதற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.. அதாவது இந்தியாவில் யாரும் எந்த விதமான வேலைக்கும் இந்த தளத்தைப் பயன்படுத்த முடியாது என்பதை இது குறிக்கிறது. எனினும் ஏற்கனவே தங்கள் சாதனத்தில் VLC மீடியா பிளேயரை டவுன்லோடு செய்த பயனர்கள் அதை பயன்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது..

ACT Fibernet, Vodafone-Idea மற்றும் பல முக்கிய ISPகளில் VLC மீடியா பிளேயர் தடை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. சீனாவால் ஆதரிக்கப்படும் ஹேக்கர் குழுவான Cicada, சைபர் தாக்குதல்களை நடத்த VLC மீடியா பிளேயர் தளத்தைப் பயன்படுத்தியது. சைபர் தாக்குதல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, தீங்கிழைக்கும் தீம்பொருள் ஏற்றியை விநியோகிக்க VLC மீடியா பிளேயரைப் பயன்படுத்துகிறது என்பதை பாதுகாப்பு வல்லுநர்கள் சமீபத்தில் அறிந்தனர். இந்த காரணத்திற்காகவே VLC மீடியா பிளேயர் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..

சமீபத்தில், இந்திய அரசாங்கம் PUBG Mobile, BGMI இன் இந்தியப் பதிப்பைத் தடைசெய்து, அதை Google Play store மற்றும் Apple App Store இலிருந்து அகற்றியுள்ளது. முன்னதாக, PUBG மொபைல், டிக் டாக், கேம்ஸ்கேனர் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய நூற்றுக்கணக்கான சீன செயலிகளை அரசாங்கம் தடை செய்தது.

இந்த செயலிகள் சீனாவிற்கு பயனர் தரவை அனுப்புவதாக அரசாங்கம் கவலை கொண்டுள்ளது. இருப்பினும், VLC மீடியா பிளேயர் ஒரு சீன நிறுவனத்தால் ஆதரிக்கப்படவில்லை.. ஆனால் இது பாரிஸை தளமாகக் கொண்ட VideoLAN நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Maha

Next Post

உத்திர பிரதேசத்தில் தனது வீட்டில்; பாகிஸ்தான் தேசிய கொடியை ஏற்றியவர் கைது..!

Sat Aug 13 , 2022
உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் பாகிஸ்தானின் தேசியக் கொடியை தனது வீட்டில் ஏற்றியதற்காக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மாவட்டத்தின் தாரியா சுஜான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேடுபர் முஸ்தகில் என்ற கிராமத்தில் இருக்கும் ஒரு வீட்டில் நேற்று காலை 11 மணியளவில் பாகிஸ்தானின் தேசிய கொடியை ஏற்றியுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், வீட்டில் ஏற்றி இருந்த […]
வரதட்சணை கேட்காமல் லட்சக்கணக்கில் புரோக்கர் கமிஷன்..!! திருமணம் முடிந்தும் சிங்கிளாக சுத்தும் இளைஞர்..!!

You May Like