உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இப்படி இருக்கையில், கடந்த வாரம் அனன்யா எலிமினேட் ஆகி வெளியேறிய நிலையில், அடுத்த நாளே என்னால் இந்த வீட்டில் ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது என்று எழுத்தாளர் பவா செல்லதுரையும் வெளியேறினார்.
இந்நிலையில் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்டில் விஷ்ணு, அக்ஷயா, ஜோவிகா, மாயா, பூர்ணிமா ரவி, பிரதீப், விசித்திரா உள்ளிட்ட 7 போட்டியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், புதிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது பவா செல்லதுரை தானாக வெளியே சென்றதால், இந்த வாரம் எலிமினேட் இருக்காது என்று சொல்லப்படுகிறது.
ஏனென்றால் இந்த சீசனில் கலந்து கொண்ட அனைவரும் டஃப் கண்டஸ்ட்டாக இருந்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆளும் மற்றொரு ஆளுக்கு சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்து வருகிறார்கள். எனவே, இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்று விஜய் டிவி நிர்வாகம் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.