fbpx

சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்கவரியில் திடீர் மாற்றம்..!! மத்திய அரசு அதிரடி

சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்க வரியில் தற்போதுள்ள சலுகை 2023 மார்ச் 31ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது

இதுதொடர்பாக மத்திய நேர்முக வரிகள் மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”குறிப்பிட்ட சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி சுங்க வரியில் தற்போதுள்ள சலுகை 2023 மார்ச் 31ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விநியோகத்தை அதிகரிப்பது மற்றும் விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பது உள்ளிட்டவையே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். உலகளாவிய விலை வீழ்ச்சியால் சமையல் எண்ணெயின் விலை இறங்கு முகத்தில் உள்ளது. உலகளாவிய விலையின் வீழ்ச்சி மற்றும் இறக்குமதி தீர்வை குறைப்பு ஆகியவற்றால் இந்தியாவில் சமையல் எண்ணெயின் சில்லரை விற்பனை விலை கணிசமாக குறையக்கூடும்.

சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்கவரியில் திடீர் மாற்றம்..!! மத்திய அரசு அதிரடி

சுத்திகரிக்கப்படாத பாமாயில், ஆர்பிடி பாமாலின், ஆர்பிடி பாமாயில், சுத்திகரிக்கப்படாத சோயா பீன் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய், சுத்திகரிக்கப்படாத சூரியகாந்தி எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மீது தற்போதுள்ள வரி விதிப்பு 2023 மார்ச் 31 வரை எந்த மாற்றமில்லாமல் நீடிக்கும். சுத்திகரிக்கப்படாத பாமாயில் வகைகள் சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மீதான இறக்குமதி தீர்வை தற்போது பூஜ்யமாக உள்ளது. இருப்பினும் இந்த வகையான சமையல் எண்ணெய்களுக்கு சுத்திகரிக்கப்படாத வகைகளுக்கான வேளாண் செஸ் மற்றும் சமூக நலத்திட்ட செஸ் 5.5 சதவீதமாக இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்கவரியில் திடீர் மாற்றம்..!! மத்திய அரசு அதிரடி

முன்னதாக மத்திய நுகா்வோா் விவகாரத்துத்றை வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி, கடந்த செப்டம்பா் 1ஆம் தேதி நிலவரப்படி உள்ளூர் சந்தையில் கடலை எண்ணெயின் சராசரி சில்லறை விற்பனை விலை கிலோவுக்கு ரூ.188.04 என்ற விலையிலும், நல்லெண்ணெய் கிலோ ரூ.172.66, வனஸ்பதி கிலோ ரூ.152.52, சோயாபீன் எண்ணெய் கிலோ ரூ.156, சூரியகாந்தி எண்ணெய் ரூ.176.45, பாமாயில் கிலோ ரூ.132.94 என்ற விலையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Chella

Next Post

’ஓராண்டில் செய்யாததை 10 நாளில் எப்படி செய்வீர்கள்’? மக்களின் கேள்வியால் பாதியில் வெளியேறிய அமைச்சர்..!!

Sun Oct 2 , 2022
வீரபாண்டி கிராம சபை கூட்டத்தில் இருந்து அமைச்சர் பொன்முடி பாதியிலேயே வெளியேறியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அப்போது அவரிடம் குடிநீர், கழிவு நீர் கால்வாய் வசதிகள் குறித்து கிராம மக்கள் கேள்வி எழுப்பினர். குடிநீருக்காக தாங்கள் மிக நீண்ட தூரம் செல்வதாகவும் வேதனை தெரிவித்தனர். […]

You May Like