fbpx

சட்டென்று மாறிய வானிலை..!! இடி மின்னலுடன் கொட்டும் மழை..!! எங்கெங்கு தெரியுமா?

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்த நிலையில், இன்று முதல் 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தென் தமிழகம் முதல் மத்தியப்பிரதேசம் வரை வடக்கு, தெற்காக கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கின்ற பகுதி வளிமண்டலத்தில் நிலவி வருகிறது. இன்று முதல் 20ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை கோடை மழை பெய்யக்கூடும் என்றும் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில் அடுத்த 2 தினங்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் சேர்ந்தது தான் கோடை காலம். இந்த காலகட்டத்தில் பகல் நேர வெப்பநிலை அதிகமாகவும், இரவு நேர வெப்பநிலை குறைவாகவும் இருக்கும். இந்த காலத்தில் கடலோர மாவட்டங்களில் இயல்பை விட சற்று அதிகமாகவும், உள் மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும் வெப்பநிலை பதிவாகும் என்று கூறியுள்ளார். சென்னையில் பகல் வேளையில் கடும் வெயில், இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் கடும் குளிர் என்று நிலவி வந்தது. கடும் வெயிலால் மக்கள் தவித்து வந்த வேலையில், சென்னையில் நேற்று திடீரென மழை இடி மின்னல், சூறைகாற்றுடன் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டது.

கோடை மழை காலத்தில் இடி, மின்னல் அதிகம் தாக்கும். மின்னல் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் அறிகுறிகள் ஏதுமின்றி மின்னல் தாக்கும். இடி, மின்னலின் போது திறந்த வெளியில் இருக்க நேர்ந்தால் 2 காதுகளையும் இறுக்கமாக மூடிக் கொண்டு குத்துக்கால் இட்டு அமர வேண்டும். அப்படி அமரும்போது குதிகால்கள் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டு இருப்பது மிகவும் அவசியம். தரைக்கு மிகவும் அருகே அமர்ந்து கொண்டிருப்பது அவசியம். அதன் மூலம் மின்னல் தாக்கும் வாய்ப்பு குறையும். காதுகளை இறுக்க மூடிக் கொள்வதால் கேட்கும் திறன் பாதிக்கப்படுவது குறையும். குதிகால்கள் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டு இருந்தால் மின்னல் தரையை தாக்கும் போது ஏற்படும் மின்சாரம் உடலில் பாயாமல் இருக்கும் என பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

Chella

Next Post

பாஜகவில் இருந்து மொத்தமாக விலகிய நிர்வாகிகள்..!! அண்ணாமலை பயங்கர அப்செட்..!!

Sat Mar 18 , 2023
கடந்த சில நாட்களாகவே பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பதவியை ராஜினாமா செய்து அதிமுகவில் இணைந்து வருகின்றனர். தற்போது ஈரோடு மாவட்ட பாஜக முக்கிய நிர்வாகிகள், கட்சியில் இருந்து கூண்டோடு விலகி அதிமுகவில் இணைந்ததால் அண்ணாமலை அதிர்ச்சி அடைந்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் முன்னிலையில் ஈரோடு வடக்கு மாவட்ட பாஜக பிரச்சார பிரிவு செயலாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். அதிமுகவை வலுப்படுத்த பாஜக உள்ளிட்ட கட்சிகளில் […]

You May Like