வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் (72) திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெள்ளையன், தற்போது சிகிச்சை பலனின்றி காலமானார். வணிகர் சங்க பேரவையின் தலைவராக வெள்ளையன் செயல்பட்டு வந்தார். இவர், அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது வியாபாரிகளுக்கு பல்வேறு அதிருப்தியை ஏற்படுத்தின. இதை பயன்படுத்திக் கொண்ட விக்கிரமராஜா, வணிகர் சங்க பேரமைப்பை உருவாக்கினார்.
இவர் திமுக ஆதரவாளர். விக்கிரமராஜாவுக்கு தமிழகம் முழுவதும் செல்வாக்கு உள்ளது. திமுகவின் தூண்டுதலின் பேரில் வணிகர் சங்க பேரவை இரண்டாக உடைக்கப்பட்டுள்ளதாக வெள்ளையன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்சனைகளால் சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 3ஆம் தேதி உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால், அவர் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆரம்பத்தில் சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த 5ஆம் தேதி முதல் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு மருத்துவர்கள் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், அவர் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Read More : டேட்டிங் செல்ல விடுமுறை அளிக்கும் நிறுவனம்..!! சம்பளமும் இருக்காம்..!! எங்கு தெரியுமா..?