நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, ஜிபிஎஸ் கட்டண வசூலை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்த நிலையில், தற்காலிகாமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஜிபிஎஸ் அடிப்படையிலான டோல் கட்டண முறைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக அரசுக்கு சொந்தமாக சாட்டிலைட்டுகளை வானத்தில் நிறுவ மத்திய அரசு முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. தனியார் சாட்டிலைட்டுகளை நம்பாமல், புதிதாகவே சாட்டிலைட்டை நிறுவன திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இத்திட்டத்தை தற்காலிகமாக மத்திய அரசு தள்ளி வைத்துள்ளது.
சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் தரவுகள்படி, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஏஜென்சிகள், நவம்பர் மாதத்திற்குள் 5,248 கிமீ தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்தியுள்ளன. இது கடந்தாண்டு காலத்தில் 4,766 கிமீ ஆகும். சுமார் 12,000 கி.மீ.களை விரிவுபடுத்துவது என்பது அரசின் இலக்காக இருந்தது. ஆனால், தற்போதைக்கு இந்த இலக்கை அடைவது வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.,
மேலும், புதிய திட்டங்களுக்கான ஏலத்தின் வேகம் இந்தாண்டு கணிசமாக குறைந்துள்ளது. 2022-23 ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில், ஏஜென்சிகள் 5,382 கி.மீ பணிக்கு ஏலம் எடுத்திருந்தன. ஆனால், அது 2,815 கி.மீ.யை எட்டவில்லை. இந்தாண்டு திட்டங்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை 2024-25ஆம் நிதியாண்டில் உள்நாட்டு உற்பத்தியையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, இனி வரும் காலங்களில் அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் புதிய திட்டங்களைத் தொடங்க வேண்டாம் என்று நிதி அமைச்சகம் சாலை அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
ஜிபிஎஸ் மூலம் எப்படி கட்டணம் வசூலிக்க முடியும்..?
ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் வாகனங்களின் ரெக்கார்டுகளை ஜிபிஎஸ் மூலம், அரசு பெற்று அவற்றை தொடர்ந்து கண்காணிக்கும். இதனால், வாகன ஓட்டிகளின் வழித்தடத்தையும், அவர்கள் எடுக்கும் சுங்கச்சாவடிகளின் விவரத்தையும் அரசால் தெரிந்து கொள்ள முடியும். வாகன ஓட்டிகள் எத்தனை சுங்கச்சாவடிகளை கடந்து செல்கிறார்கள் என்பதைச் சரிபார்த்து மொத்த டோல் வரியைக் கணக்கிடலாம்.