fbpx

போட்டியின்போது திடீர் மாரடைப்பு!. மைதானத்திலேயே உயிரைவிட்ட 17 வயது பாட்மின்டன் வீரர்!

Badminton player died: சீனாவை சேர்ந்த 17 வயது இளைஞரான ஜாங் ஜிஜி, இந்தோனேஷியாவில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும் போதே மயங்கி கீழே விழுந்து உயிரிழந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் இந்தோனோஷியாவின் யோகர்த்தாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 30-ம் தேதியன்று நடைபெற்ற போட்டியில் சீனாவை சேர்ந்த 17 வயது வீரர் ஜாங் ஜிஜி என்பவரும், ஜப்பானின் கசுமா கவானோவும் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது ஜாங் ஜிஜிக்கு திடீரென மாரடைப்பு ஏற்படவே, ஆடுகளத்திலேயே சுருண்டு விழுந் விழுந்தார். சர்வதேச போட்டிகளின விதிகளின் படி நடுவரின் உத்தரவு வரும் வரையில் யாரும் ஆடுகளத்தின் நடுவே செல்லகூடாது. இதனால் சுருண்டு விழுந்த வீரரின் அரு்கில் யாரும் செல்ல முடியாதநிலை ஏற்பட்டது.

தொடர்ந்து நடுவரின் உத்தரவையடுத்து உடன் அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். ஆனால் ஏற்கனவே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இளம் வீரர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சக வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Readmore: ஜம்மு, காஷ்மீரில் வாக்கெடுப்பு கேட்பது இந்த பிரிவுகளின் கீழ் குற்றம்..! UAPA தீர்ப்பாயம் விதிகள் கூறுவது என்ன..?

English Summary

Sudden heart attack during the match! A 17-year-old badminton player who died on the field!

Kokila

Next Post

17 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு... மாலை 4 முதல் 6 மணி வரை பாரம்பரிய நாட்டுப்புறக் கலை பயிற்சி வகுப்பு...!

Wed Jul 3 , 2024
Traditional folk art workshop for people above 17 years... 4 to 6 p.m

You May Like