பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வயிற்று வலி காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸின் பாக்னா கிராமத்தில் நடந்த என்கவுன்டரில் ஜக்ரூப் சிங் ரூபா மற்றும் மன்பிரீத் சிங் ஆகியோர் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. அவர்கள் பாடகர் சித்து மூஸ் வாலா கொலையில் ஈடுபட்டதாகவும், பஞ்சாப் காவல்துறையுடன் கிட்டத்தட்ட ஐந்து மணி நேர என்கவுண்டரில் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மாநிலத்தில் இரண்டு ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கையை வெற்றிகரமாகச் செய்த பஞ்சாப் மாநில காவல்துறை மற்றும் குண்டர் தடுப்பு பணிக்குழுவை நேற்று முதல்வர் பகவந்த் மான் பாராட்டினார். ஆம் ஆத்மி தலைமையிலான பஞ்சாப் அரசு, மாநிலத்தில் உள்ள குண்டர்கள் மற்றும் சமூக விரோதிகளுக்கு எதிராக ஒரு தீர்க்கமான போரைத் தொடங்கியுள்ளதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் பகவந்த் மானுக்கு நேற்றிரவு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. அவர் தற்போது டெல்லியில் சரிதா விஹார் பகுதியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு வயிற்றில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்..
ஜூலை 7 அன்று, மான், டாக்டர் குர்ப்ரீத் கவுரை பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது..