fbpx

திடீர் உடல்நலக்குறைவு..!! அமைச்சர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!!

திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு அவ்வப்போது உடல்நல பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த மாத இறுதியில் திடீர் காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். துரைமுருகன் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது உடல் நலனில் முன்னேற்றம் ஏற்படவே அவர் மருத்துவமனையில் இருந்து மறுநாளே வீடு திரும்பினார்.

திடீர் உடல்நலக்குறைவு..!! அமைச்சர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!!

இந்நிலையில், இன்று அதிகாலையில் மீண்டும் உடல் நல பாதிப்பு ஏற்படவே துரைமுருகன் மீண்டும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லேசான காய்ச்சல் உள்ளதாகவும் அவர் ஓய்வெடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வயோதிகம் காரணமாகவே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Chella

Next Post

நடு ரோட்டில் வெட்டிக் கொல்லப்பட்ட பாமக பிரமுகர்.. அச்சத்தில் மக்கள்.!

Wed Jan 11 , 2023
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அருகே சோழபுரம் பகுதியைச் சேர்ந்த திருஞானசம்பந்தம் என்ற 53 வயது நபர் பாமக முன்னாள் பேரூர் தலைவராக பதவி வகித்து வருகின்றார். இவருக்கு 42 வயதில் வனிதா என்ற மனைவியும், ஸ்ரீமதி, ஸ்ரீ ராம் என்ற பிள்ளைகளும் இருக்கின்றனர். திருசம்பந்தத்திற்கும் ராஜேந்திரன் என்பவருக்கும் பல ஆண்டுகளாக நில தகராறு ஏற்பட்டு வந்தது. சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட தகராறு திருஞானசம்பந்தத்தை ராஜேந்திரன் குடும்பத்துடன் சேர்ந்து […]

You May Like