கடந்த ஒரு வார காலமாகவே தமிழகம் மற்றும் புதுவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
இந்த நிலையில் தான் சில நாட்களுக்கு முன்னதாக வரும் 18 மற்றும் 19 உள்ளிட்ட தேதிகளில் தமிழக மற்றும் புதுவையில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அந்த வகையில், கடந்த சில தினங்களாக புதுவையில் கடுமையான வெயில் கொளுத்தி வந்த நிலையிப் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது திடீர் மழையின் பெய்தது.
இந்த மழையின் காரணமாக கடற்கரையில் குவிந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் நடைபயிற்சியின் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் உள்ளிட்டோர் அங்கிருந்த கட்டிடம் மற்றும் மரங்களின் கீழ் ஒதுங்கினர். பலர் மழையில் நனைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர் மழையால் புதுச்சேரி நகர் மற்றும் ஊரக பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியது