fbpx

போர் பதற்றங்களுக்கு மத்தியில் திடீர் ராஜினாமா!… அக்.7 தாக்குதலை தடுக்க தவறியதால் பதவி விலகல்!

Israel’s military: இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பொறுப்பேற்று இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் அஹ்ரோன் ஹலிவா திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

காசா போர் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக நடைபெறுகிறது. இந்த போரில் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். அதில் பலர் அண்டை நாடுகளான எகிப்து, லெபனான் எல்லைகளில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கி வருகின்றனர்.

இருந்தபோதிலும் அகதிகள் முகாம் மீது குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது. காசாவை முற்றிலும் அழிக்கும்வரை ஓயப்போவதில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறியுள்ளார். ரபாவில் தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக போர் தீவிரமடைந்து வருகிறது. இது மத்திய கிழக்கு பகுதியில் பிராந்திய போராக விரிவடைந்து வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் அஹ்ரோன் ஹலிவா திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை தடுத்து நிறுத்த தவறியதற்காக அஹ்ரோன் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. அதன் அடிப்படையில் அவர் தனது பதவியில் இருந்து விலகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Readmore: தனியார் பள்ளி மோகம்!… LKG சேர்க்கையின் அவலம்!… விடிய விடிய கொசுக்கடியில் காத்திருந்த பெற்றோர்கள்!

Kokila

Next Post

குலுங்கும் மதுரை - கள்ளழகரை காண குவிந்த லட்ச கணக்கான பக்தர்கள்

Tue Apr 23 , 2024
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று(ஏப்ரல் 23) காலை நடைபெறுகிறது. மிகவும் பிரசித்திப்பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றதுடன் கோலாகலமாக தொடங்கியது. தினம் ஒரு திருவிழாக் கோலம் பூண்டு மதுரை மாநகர் ஆர்ப்பரித்து கொண்டிருக்கிறது. நேற்றுமுன்தினம் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஷ்வர் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று திருக்கல்யாண கோலத்தில், பெரிய தேரில் […]

You May Like