தங்கம் சாமானிய மக்களின் நீண்ட கால சேமிப்பு கருவியாக இருக்கும் வேளையில் தொடர்ந்து அதிகரித்து வரும் விலை காரணமாக ரீடைல் சந்தையில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்தாலும் தங்கம் வாங்கப்படும் அளவுகள் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா மற்றும் இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ள வேளையில் டாலர் மதிப்பு சரிந்தது மட்டும் அல்லாமல் பத்திர முதலீட்டு மீதான முதலீட்டின் லாபம் பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனால் பத்திர சந்தையில் இருந்து வெளியேறிய முதலீடு பங்குச்சந்தையிலும், தங்கம் மீது குவிந்துள்ளது.
அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் பணிவீக்க உயர்வு, வேலைவாய்ப்பு எண்ணிக்கையில் சிறு தடுமாற்றம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு ஜூலை 26 ஆம் தேதி தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்ததை 0.25 சதவீதம் உயர்த்தும் என கணிக்கப்பட்டு உள்ளது. வட்டி உயர்வின் மூலம் பணவீக்கம் குறைந்தால் தங்கம் விலையும் குறையும், இதனால் அடுத்த சில நாட்களுக்கு தங்கம் விலையில் அதிகளவிலான தடுமாற்றம் இருக்கும் என்பதால் தங்கம் வாங்குபவர்கள் தங்களுடைய டிமாண்ட் மற்றும் தேவையை பொருத்து தங்கத்தை வாங்குவது சிறந்த முதலீட்டு முடிவாக இருக்கும்.
மேலும் இது ஆசிய சந்தையில் ஏற்பட்ட தாக்கத்தின் எதிரொலி மட்டுமே ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தை துவக்கத்தில் கூடுதலாக உயரவும் வாய்ப்புகள் உள்ளது. இதேவேளையில் இன்று MCX சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.04 சதவீதம் உயர்ந்து 58,799 ரூபாய் உயர்ந்துள்ளது. இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 0.26 சதவீதம் அதிகரித்து 71,305 ரூபாயாக உள்ளது. இது இரண்டுமே பியூச்சர்ஸ் சந்தையின் விலை நிலவரங்கள். இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 200 ரூபாய் உயர்ந்து 54,650 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 210 ரூபாய் உயர்ந்து 59,620 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 160 ரூபாய் அதிகரித்து 43,720 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 200 ரூபாய் உயர்ந்து 73600 ரூபாயாக உள்ளது.