fbpx

தமிழ்நாட்டில் அரிசி விலை திடீர் உயர்வு..!! இதுதான் காரணமா..? பொதுமக்கள் அதிர்ச்சி..!!

தமிழ்நாட்டில் அரிசி விலை திடீரென உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

கடந்த மே மாத இறுதியில், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடமிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்று வந்திருந்தது. அதில், “தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்குத் தொடர்ந்து அரிசி கடத்தப்படுகிறது. 7 வழித்தடங்கள் வழியாக, கார், பைக், லாரிகள் மூலம் அரிசியைக் கடத்துகிறார்கள். அந்த அரிசி ஆந்திராவிலுள்ள ஆலைகளில் பாலிஷ் செய்யப்பட்டு, கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் கடத்தப்படுகிறது. எனது சொந்த தொகுதியான குப்பம் தொகுதியில், கடந்த 16 மாதங்களில் 13 அரிசி கடத்தல் வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்” என்று எழுதியிருந்தார்.

சந்திரபாபு நாயுடுவின் அந்த கடிதம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. அதன் பிறகு, முதல்வர் ஸ்டாலினே நேரடியாக தலையிட்டு, இதுகுறித்து தீவிர நடவடிக்கையை எடுக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிடவும், அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள். ரேஷன் பொருள் பதுக்குதல் குறித்து, இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எனினும், ரேஷன் அரிசி கடத்தல்கள் குறைந்துள்ளதே தவிர முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.

குறிப்பாக தேனி மாவட்டம் குமுளி, கம்பம், மொட்டு வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக 4 நாட்களுக்கு முன்புகூட செய்திகள் வந்திருந்தன. இப்படி அரிசி கடத்தலால், ரேஷன் அட்டைதாரர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், ரேஷன் அரிசியை தவிர்த்து, மற்ற சாப்பாட்டு அரிசிகளிலும் விலை உயர்ந்து வருவதாக பகீர் கிளம்பி உள்ளது.. அதிலும், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரிசி விலை உயர்ந்துள்ளது.. பொன்னி, பச்சரிசி, பாஸ்மதி உள்ளிட்ட அரிசிகளின் விலை அதிகரித்துவிட்டது.. மூட்டை ஒன்றுக்கு 300 ரூபாய் விலை ஏற்றம் இருக்கிறதாம்..

இதற்கு அரிசி ஆலை ஓனர்கள் சில காரணங்களை சொல்கிறார்கள்.. ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து அரிசி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது அதிகரித்திருக்கிறதாம்.. இதைத்தவிர, கர்நாடகாவில் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட இருப்பதாக தேர்தல் வாக்குறுதி அறிவிக்கப்பட்டுள்ளதும் ஒரு காரணம் என்கிறார்கள். இதன்காரணமாக, அதிகமான நெல் கொள்முதல் செய்யப்படுவதாகவும், கர்நாடக இலவச அரிசி அறிவிப்பு காரணமாகவே, பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படும் நெல் அளவில் தாக்கமும் ஏற்படுவதாகவும் சொல்கிறார்கள். அதனால்தான் தமிழ்நாட்டிலும், ஒரு கிலோ அரிசி விலை 2 ரூபாய் முதல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

நெற்களஞ்சிய பகுதிகளை வரப்பிரசாதமாக பெற்றுள்ள நிலையில், இப்படி ஒரு தட்டுப்பாடா? என்ற குழப்பமும் எழுந்துள்ள நிலையில், அதற்கும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது.. நெற்களஞ்சிய பகுதியில், விளையும் நெல் பயிரானது, பொது விநியோகத் திட்டத்திற்காக கொள்முதல் செய்யப்படுவதாக சொல்கிறார்கள். எனவே, இப்படிப்பட்ட சூழலில், வர்த்தக ரீதியிலான பயன்பாட்டிற்கு பிற மாநிலங்களின் உதவியும் தமிழகத்துக்கு தற்சமயம் உடனடி தேவையாக இருக்கிறது.. எப்படி பார்த்தாலும், இன்னும் 6 மாத காலத்துக்கு அதாவது அடுத்த அறுவடை காலம்வரை, இந்த அரிசி விலையில் உயர்வு இருக்கும் என்கிறார்கள்.. எனவே, இந்த விலை உயர்வு குறித்து தமிழக அரசு தலையிட்டு, உடனடி நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

Chella

Next Post

ஓசியில் பிரட் ஆம்லெட், ஜூஸ் கேட்டு ரகளை..!! 4 பெண் காவலர்கள் அட்ராசிட்டி..!! பாய்ந்தது ஆக்‌ஷன்..!!

Wed Jun 7 , 2023
படப்பையில் உள்ள ஜூஸ் கடை ஒன்றில் பிரட் ஆம்லெட், சாக்லேட், ஜூஸ் போன்றவற்றை ஓசியில் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் மகளிர் காவல் ஆய்வாளர் உள்பட 4 பேரை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் விஜயலட்சுமி. இந்நிலையில், அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் ஜெயமாலா உள்ளிட்ட […]
ஓசியில் பிரட் ஆம்லெட், ஜூஸ் கேட்டு ரகளை..!! 4 பெண் காவலர்கள் அட்ராசிட்டி..!! பாய்ந்தது ஆக்‌ஷன்..!!

You May Like