fbpx

வணிக வளாகத்திற்கு திடீர் துப்பாக்கிச்சூடு..!! போலீஸை நோக்கி வந்த தோட்டா..!! பதிலடி தாக்குதலில் இளைஞர் சுட்டுக்கொலை..!!

அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கிச் சூடு கலாசாரம் அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2024ஆம் ஆண்டு மட்டும் 385 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அங்கு தற்போது மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள எல்கார்ட் நகரில் செயல்பட்டு வரும் வணிக வளாகத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு கடைக்கு பொருட்கள் வாங்குவது போல் இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது, அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்துள்ளார். அப்போது, கடைக்குள் இருந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரை பிடிக்க முயன்றபோது, அந்த இளைஞர் போலீசாரை நோக்கியும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் இரண்டு போலீசார் படுகாயமடைந்தனர். இதற்கு பதிலடியாக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த இளைஞர் கொல்லப்பட்டார்.

Read More : ”சார் என்னை விட்ருங்க”..!! பெண் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்பயிற்சி ஆசிரியர்..!! தனி அறையில் வைத்து கொடூரம்..!!

English Summary

The recent increase in the shooting culture in America has caused great shock among the public.

Chella

Next Post

சேலம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம்..!! - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Wed Jan 29 , 2025
Salem District A.D.M.K. Secretary removed from party..!! - Edappadi Palaniswami announcement

You May Like