fbpx

திடீர் மூச்சுத்திணறல்..!! விஜயகாந்த் குடும்பத்தினருடன் அவசர ஆலோசனை..!! வெளியானது அதிர்ச்சி தகவல்..!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் கடந்த 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருடைய உடல்நலம் குறித்து வதந்திகள் கிளம்பின. இதையடுத்து, தேமுதிக சார்பில் வெளியான அறிக்கையில், விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்றைய தினம் மியாட் மருத்துவமனை சார்பில் ஒரு அறிக்கை வெளியானது. அதில், விஜயகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. ஆனால், அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை. அவருக்கு நுரையீரல் தொடர்பான சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பார். அவருக்கு 14 நாட்கள் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, அவரது குடும்பத்தினருடன் மருத்துவர்கள் குழு அவசர ஆலோசனை நடத்தியுள்ளது. மேலும், விஜயகாந்துக்கு கூடுதல் ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு, அவரது உடல்நிலை தீவிரமாக கண்காணிப்படுவதாகவும் கூறப்படுகிறது.

Chella

Next Post

ரூ.1,000 உரிமைத்தொகை வரவில்லையா..? பெண்களே உஷார்..!! இப்படியும் மோசடி நடக்குது..!!

Thu Nov 30 , 2023
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எறையூர்பாளையம் பகுதியில் டிப்டாப்பாக உடை அணிந்து கொண்டு இரண்டு மர்ம நபர்கள் வந்துள்ளனர். அந்த பகுதிகளில் உள்ள பெண்களிடம் தங்களை அரசு அதிகாரிகளாக அறிமுகப்படுத்திக் கொண்டனர். பின்னர், மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக வந்துள்ளோம் எனக் கூறி பல வீடுகளில் விசாரணை செய்துள்ளனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சரோஜா என்பவர் வீட்டிற்குச் சென்ற அந்த இருவரும், உரிமைத்தொகை குறித்துக் கேட்டுள்ளனர். அதற்கு […]

You May Like